கடந்த வருடம் நவம்பர் மாதம், இந்தியாவில் இருக்கும் பல இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் சமூக தொழில்முனைவோர் விருதுகளை வழங்கிய National Foundation for Entrepreneurship Development நிறுவனம் தற்போது மகளிர்களுக்கான விருதுகளையும் வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று விருது வழங்கும் விழா நடைபெற இருப்பதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?.
1. அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 வருடமாக பணி செய்பவர்கள்,
2. அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 வருடமாக பணி செய்பவர்கள்,
3. சமூக சேவைப் பணியில் இருப்பவர்கள்.
4. சொந்தமாக தொழில் செய்துவருபவர்கள்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 73730 95959 என்கிற மொபைல் எண்ணிற்கு அழைக்கலாம்.
No comments:
Post a Comment