பிளாஸ்டிக் கழிவுகளில் தார்சாலை போடுவதை கண்டுபிடித்ததே நம்ம தமிழர் தாங்க.. இதை படித்தால், நீங்களும் நம்ம ஊருக்கு பிளாஸ்டிக் ரோடு கேட்பீர்கள்...

ARTICLE BY www.kongumalar.com
ஒரு மனிதன் காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது. இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் கருவியும் பிளாஸ்டிக் மொபைல் தான். கம்ப்யூட்டரில் இருந்து பேனா வரை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. அதுமட்டுமா, "பிளாஸ்டிக் யை தடை செய்" என்று பிளாஸ்டிக் பிளக்ஸ் பேப்பரில் தான் விளம்பரம் செய்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாடுகளை அளிக்கவோ, குறைக்கவோ முடியாது. ஆனால் HDPE, LDPE, HM, PP போன்ற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியும். இதுவே, பிஸ்கட் கவர் மற்றும் சில அலுமனிய பூச்சு செய்யப்பட்ட கவர்களாக இருந்தால் மறுசுழற்சி செய்யமுடியாது. ஆனால் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை ரோடு போடுவதற்கு பயன்படுத்த முடியும். அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தாரில் மிக்ஸ் செய்து தார் சாலைக்கு பயன்படுத்தினால் தண்ணீர் மற்றும் வெப்பத்தை தாங்கி சாதாரண ரோடை விட தரமானதாக இருக்கும் என்று கண்டுபிடித்தவர் மதுரை தியாகராஜர் காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியின் வேதியியல் பிரிவில் டீன் ஆக பணிபுரிந்துவரும் டாக்டர்.ஆர் வாசுதேவன் என்பவர் தான். 2006 ஆம் ஆண்டில் இதற்கான Patent Rights யையும் வாங்கியிருக்கிறார்.
www.kongumalar.com
பிளாஸ்டிக் சாலை எப்படி?.
3.75 மீட்டர் அகலத்தில் சாதாரண முறையில் தார் சாலை போட வேண்டும் என்றால் ஒரு கிலோமீட்டருக்கு 10 டன் பிட்டுமன் தேவைப்படுகிறது. 1 டன் பிட்டுமன்னிற்கு ரூ.50,000 லிருந்து 60,000 செலவாகும். ஆனால் இதுவே ஒரு கிலோ மீட்டரில் பிளாஸ்டிக் தார் சாலை போட வேண்டும் என்றால் 9 டன் பிட்டுமன் மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தினால் போதும். இதனால் ஒரு கிலோமீட்டர் பிளாஸ்டிக் தார் சாலைக்கு ரூ.50000 லிருந்து 60000 மிச்சமாவதுடன் 1 டன் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் அபாயத்தில் இருந்தும் தடுக்கமுடிகிறது.
மதுரை தியாகராயர் காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டாடா நிறுவனமான JUSCO மூலம் தற்போது ஜம்ஷெத்பூரில் 50 கிலோமீட்டர் தூரத்தில் பிளாஸ்டிக் தார் சாலை போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகளை குண்டும் குழியுமாக செய்துவிட்டார்கள். பணி முடிந்தவுடன் தார்சாலை போடுவதற்கான பணி தொடங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ஜம்ஷெத்பூர் போன்று நம்ம ஊர்களிலும் பிளாஸ்டிக் சாலைகளுக்கு வழிசெய்தால், பிளாஸ்டிக் கழிவுகளையாவது குறைக்கலாமே?...