இப்படி செஞ்சா, நிச்சயமாக மின் கட்டணம் குறையும்!!. படித்துப் பார்த்து நீங்கள் இதை செய்யலாம்..

கான்கிரிட் வீடு கட்டினாலும், ஓடுகளை வைத்து கேரளா வீடுகளைப் போன்று அலங்கரித்து வருகிறோம். இதுவே அந்த ஓடுகளில் சோலார் பொருத்துவிட்டால், மின் கட்டணத்தை குறைவாக கட்டலாம். பெரிய சோலார் போட்டோவால்டிக் போர்டை வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஓடுகளைப் போன்று அமைப்பில் இருக்கும் சோலார் போர்டை ஓடுகளில் இணைத்துவிட்டால் போதும். இந்த கண்டுபிடிப்பை வெளிநாட்டில் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் நம் இளைஞர்களும் இதுபோன்று கண்டுபிடித்தால், பவர்கட் பிரச்சனையாவது குறையும். தற்போது கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், இதை பிராஜெக்டாக செய்து பார்க்கலாமே?..