வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை. ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படும்.

வருகிற 21–ந்தேதி ஆயுதபூஜை விடுமுறை.

மறுநாள் 22–ந்தேதி விஜயதசமியும் விடுமுறையாகும் .

23–ந்தேதி மொகரம் பண்டிகை விடுமுறையாகும்.

24–ந்தேதி மாதத்தின் இறுதி சனிக்கிழமை விடுமுறை நாளாகும்.

25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமான விடுமுறை நாளாகும்.

5 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கக்கூடும். குறிப்பாக காசோலை பரிவர்த்தனை, டெபாசிட், அந்நிய செலாவணி, வங்கி வரைவோலை (டி.டி) எடுத்தல் உள்ளிட்ட பல பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படும்.

பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் ஏ.டி.எம். மையங்களில் தேவையான அளவு பணம் இருப்பு வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment