"வாழ்வோம் வாழவைப்போம்". இது படத்தின் பெயர் இல்லைங்க. ஒரு நடிகரின் உண்மையான கதை. தன் சொந்த செலவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.



"வாழ்வோம் வாழவைப்போம்" என்கிற பவர்ஃபுல் மந்திரத்துடன் செயல்படும் ஒரே நடிகர் நம்ம ராகவா லாரன்ஸ். தன் சொந்த செலவில் 2006 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஒன்பது வருடமாக மாற்றுத்திறனுடையோர் நலனுக்கென தங்கும் விடுதி, நடனப்பள்ளி, கல்வி உதவிகள், சிறுதொழில் செய்ய உதவி, மருத்துவ உதவிகள், குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் கராத்தே பயிற்சி. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மருத்துவம், கல்வித்துறை மற்றும் குடும்பங்களுக்கு நிதி உதவி. சமூக நல அமைப்புகளுக்கு நிதி உதவி, ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம், இருதய சிகிச்சைக்கு நிதி உதவி என பல உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ். சமீபத்தில் தனது சம்பளப் பணத்தில் 1 கோடி ரூபாயை அப்துல்கலாம் பெயரால் 100 இளைஞர்களுக்கு வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் இயற்கை விவசாயத்திற்கும் உதவி செய்திருக்கிறார். 
 
தற்போது 400 ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். ஆம், சென்னையில் 200 குழந்தைகளையும், மற்ற மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து 200 குழந்தைகளையும் தேர்வு செய்திருக்கிறார். 400 குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி முதல் பிளஸ்-2 வரை  கல்வி கட்டணம் முழுவதையும் தனது "லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்" அறக்கட்டளை செலுத்தும் என்று லாரன்ஸ் ஒரு விழாவில் உறுதி அளித்திருக்கிறார். 

Article by www.kongumalar.com 

லாரன்ஸ் பற்றி தெரியாத விஷயங்கள்?

லாரன்ஸ், சிறுவயதில் ஒரு கை கால் இயங்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். தன் தாயின் முயற்சியினால் எளியமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்நோயிலிருந்து விடுபட்டுள்ளார். அந்நோயினால், 10 ஆம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்து படிப்பை தொடரமுடியவில்லை. அதிலிருந்து மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்காவது உதவி செய்ய வேண்டும் என நினைத்த லாரன்ஸ். சினிமாத்துறையில் கால்பதித்து நடிகராகவும், நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், இசை இயக்குனராகவும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரிவில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்து உலக மக்கள் பாரட்டப்படுகின்ற வகையில் வளர்ந்தபொழுதும் வளர்கின்றபொழுதும், தான் ஆரம்பத்தில் 10 பேருக்காவது உதவ வேண்டும் என்கிற நிலைமாறி தற்போது 1000 மாற்றுத்திறனாளிகளுக்கும், மருத்துவத்துறையிலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் கல்வித்துறை வழிகளில் நிதி உதவி செய்து வருகிறார்.
இவர் தான் உண்மையான நடிகர். இவரைப் பார்த்தாவது, மற்ற நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மாறினால் நிச்சயம் இந்தியா வல்லரசு ஆகிவிடும். 

லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்க்கு உதவி செய்ய நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

லாரன்ஸ் சாரிட்டபிள் ட்ரஸ்ட், 2/4 முதல் குறுக்கு தெரு, 3 வது அவன்யூ, அசோக் நகர், சென்னை – 600 083.
போன் : 044-32536575, செல்போன் : +91 - 9790750784, 9791500866
இமெயில் - larenccecharitabletrust@yahoo.com
இணையதள முகவரி - www.lctchennai.com