வேலையில்லா பட்டதாரிகளை குறைக்க கொங்குமலரின் ஒரு நாள் பயிற்சித் திட்டம்.

புதிய முயற்சி என்று சொன்னவுடன் நீங்கள் தொழில் செய்வதற்காக விளம்பரம் செய்கிறீர்கள் என்று சிலரின் பதிலாக இருந்துவந்தன. தொழில் செய்கிறோம் என்றால், பயிற்சிக்கட்டணத்தை ஆயிரக்கணக்கில் தானே கேட்போம். நாங்கள் கேட்பது, வெறும் 150 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை மட்டுமே. ஒரு நாளில் வேலை வாய்ப்புக்கு தகுந்தது போல் மாணவர்களை எங்களால் மாற்றமுடியும்.

கொங்குமலரைப் பற்றி?

கொங்குமலர் என்றால் கட்சிக்கும், ஜாதிக்கும் சம்பந்தமில்லை. ஈரோடு மாவட்டத்தில் தொடங்கிய சேவை என்பதால் கொங்கு என்று பெயர் வந்தது. மலர் என்றால் இதழ்.
புதிய தலைமுறை பத்திரிக்கையில் பயிற்சி பெற்று, சிறந்த பத்திரிக்கையாளர் என்கிற விருதைப் பெற்ற ஒருவரால் கொங்குமலர் ஆன்லைன் பத்திரிக்கை 10 நவம்பர் 2014 அன்று தொடங்கப்பட்டது. படித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்காக, வேலை வாய்ப்புக்கு இலவசமாக உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவும், வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறக்கூடாது என்பதற்காகவும் இந்த சேவை. பல நிறுவனங்கள் சொல்லும் ஒரே பதில், "மாணவர்கள் படிப்பை தவிர, வேறு பிரிவில் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான், தனியாகத் தெரிவார்கள். வேலையும் உடனே கிடைக்கும்". இதற்காகவே ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம். சம்பாதிக்கும் நோக்கத்துடன் இல்லை. ஒரு மாணவருக்கு 150 லிருந்து 300 ரூபாய் போதும். வேலை வாய்ப்புக்கு நாங்கள் உதவி செய்ய தயார். இனி மாணவர்கள் கையில் மட்டுமே...   

விண்ணப்பிப்பது எப்படி?.

மாணவர்கள் என்றால் கல்லூரியில் அனுமதி பெற்று எங்களை அழைக்கலாம் அல்லது கல்லூரிகளும் நேரடியாக எங்களை அழைக்கலாம். பயிற்சி மற்றும் கட்டணம் பற்றிய விவரங்கள் வேண்டுமெனில், தங்களது இ-மெயில் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விவரங்களுக்கு: 73730-95959

என்றும் எதிர்கால நலனுடன் www.kongumalar.com

No comments:

Post a Comment