சாதாரண காலங்களில் ஒரு வீட்டில் இரண்டு ஃபேன்கள் மட்டுமே இயங்கி வரும். இதுவே வெயில் காலம் வந்திவிட்டால் ஒருவருக்கு ஒரு ஃபேன் வேண்டும், இல்லையெனில் தூக்கமே வராது என்று புலம்பிக்கொண்டிருப்போம். ஒரு வீட்டில் நான்கு நபர்கள் என்றால், 2 சீலிங்க் பேன்கள், 2 டேபிள் ஃபேன்கள் என்று இயக்கிவருவோம். ஏ.சி (Air Conditioner) இருந்தா, நல்லா இருக்கும்னு நினைத்தாலும் மின்கட்டணம் அதிகமாகுமே என்கிற கவலையும் நம்முடன் இருக்கும். ஏ.சி.யை பயன்படுத்தினால் மின்கட்டணம் அதிகமாகுமா?. ஏ.சி யை வாங்கும்போது பார்த்து வாங்கினால், மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
எந்த ஏ.சி யை வாங்கினால் மின் கட்டணம் குறைவாகும்?.
ஏ.சி என்று கடைகளில் கேட்டால். நிறைய கம்பெனிகளையும், மாடல்களையும் மட்டுமே காண்பிப்பார்களே தவிர. குறைவான மின் கட்டணத்தை பயன்படும் ஏ.சி யை மட்டும் காட்ட மாட்டார்கள். அது என்ன புதுவகையான ஏ.சி என்று நினைக்கிறீர்களா?. அதுதான் (INVERTER) இன்வர்ட்டர் ஏ.சி.. (INVERTER) இன்வர்ட்டர் ஏ.சி யை பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகரிக்காது.
இன்வர்ட்டர் ஏ.சி என்றால் என்ன?.
இன்வர்ட்டர் ஏ.சி என்றால் வீட்டில் கரண்ட் போனால் உபயோகிக்கப்படும் இன்வர்ட்டர் மூலம் இயங்கிவதில்லை. இன்வர்ட்டர் ஏ.சி என்பது ரூம் கூலிங் ஆன பின்னர் கம்ப்ரசர் மோட்டார் இயக்குவதை குறைத்துவிடும். இதுவே சாதாரண ஏ.சி என்றால் ரூம் கூலிங் ஆனாலும், கம்ப்ரசர் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். கம்ப்ரசர் இயக்குவதை குறைத்தாலே மின் கட்டணம் குறைந்துவிடும் அல்லவா?. (எழுத்து: www.kongumalar.com)
எவ்வளவு மின் கட்டணம் வரும்?.
தினமும் 8 மணி நேரம் ஏ.சி யை உபயோகிக்கிறோம் என்றால், இரண்டு மாதத்திற்கு 60 யூனிட் அளவு மட்டுமே தேவைப்படுகிறது. இதுவே சாதாரண ஏ.சி என்றால் இரண்டு மாதத்திற்கு 120 யூனிட் தேவைப்படும். "இன்வர்ட்டர் ஏ.சி யை ஆன் செய்யும்பொழுது, ரிமோட்டில் "SLEEP" என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்தால் மின் அளவில் 10 யூனிட் குறைய வாய்ப்புகள் உள்ளன.
ஏ.சி வாங்க எவ்வளவு ஆகும்?.
எல்லா கடைகளிலும், இன்வர்ட்டர் ஏ.சி விற்கப்படுகிறது. சாதாரண ஏ.சி யை விட பத்தாயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். பத்தாயிரம் விலையை பார்த்தீர்கள் என்றால் வாழ்நாள் முழுவதும் அதிகமான மின்கட்டணத்தை செலுத்த வேண்டியது இருக்கும். www.kongumalar.com
இது விளம்பரம் இல்லைங்க, எங்கள் வீட்டில் நான்கு மாதமாக இன்வர்ட்டர் ஏ.சி யை பயன்படுத்தியதில் குறைவான மின் கட்டணம் வந்த காரணத்தால் மட்டுமே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
மின்சாரத்தை சேமிப்போம், தடையில்லா மின்சாரம் பெறுவோம்...
No comments:
Post a Comment