டி.என்.பி.சி குரூப் தேர்வு மற்றும் அரசுத்தேர்வுகளுக்கு தயார் செய்ய பள்ளிப் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

டி.என்.பி.சி குரூப் தேர்வு மற்றும் இதர அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்ய பள்ளிப்புத்தகங்கள் கிடைக்காமல் அலைமோதினோம். பள்ளிப் புத்தகத்தில் இருந்தும் பல கேள்விகள் வருகிறது. பள்ளி மாணவர்களை தேடி, புத்தகங்களை வாங்கி படிப்பதற்குள் தேர்வு வந்துவிடுகிறது. இதுபோன்ற சிரமங்கள் இனிமேல் இருக்க வாய்ப்பில்லை. ஆம், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பில் இருக்கும் பாடப்புத்தகங்களை இலவசமாக ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். PDF Format யில் இருக்கும் இந்த புத்தகங்கள் 0.31 MB லிருந்து 13 MB க்குள் மட்டுமே உள்ளது. சி.பி.எஸ்.இ – தமிழ் மற்றும் D.T.Ed  படிப்புக்கான பாடப்புத்தகங்களையும் இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு நினைத்தால், இப்படியும் செய்யலாம்...

சுமார் 5 கிலோ எடை மதிப்புள்ள புத்தகங்களை, பள்ளிக்குழந்தைகள் தினமும் சுமந்து வருகிறார்கள். குழந்தைகளை இந்த சிரமத்தில் இருந்து காப்பாற்ற, அனைத்து பள்ளிகளிலும் புரோஜெக்டர் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF புத்தகங்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்கலாம். பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வீட்டில் படிக்க பயன்படுத்தச் சொல்லலாம். இப்படி செய்தால், புத்தகங்களை சுமந்துசொல்ல அவசியமே இருக்காது.  

இலவச ஆன்லைன் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய: www.textbooksonline.tn.nic.in 

No comments:

Post a Comment