பாரத ஸ்டேட் வங்கி அல்லாத 23 பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் (CWE PO/MT-V) பணியில் சேர விரும்புபவர்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அலகாபாத் வங்கி, ஆந்திர வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்ரேஷன் வங்கி, தேனா வங்கி, இ.சி.ஜி.சி, எக்சிம் வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி ஆகிய வங்கிகளில் புரோபெஸ்னரி அதிகாரி/ மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி இடங்களில் சேர விரும்புபவர்கள் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூலை முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-7-1985-க்கு முன்னதாகவோ அல்லது 1-7-1995க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. தகுதி உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் Preliminary examination மற்றும் Main examination என இரண்டு தேர்வுகள் உள்ளன. Preliminary தேர்வில் இங்கிலீஷ் லாங்குவேஜ், ஆப்டிட்யூட், ரீசனிங் எபிலிட்டி ஆகியவை குறித்து மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இங்கிலீஷ் லாங்குவேஜ் பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 35 மதிப்பெண்களும், ரீசனிங் எபிலிட்டி பிரிவுக்கு 35 மதிப்பெண்களும் உள்ளன. இத்தேர்வு எழுத ஒரு மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சியானவர்களை அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், ஆப்டிட்யூட், வங்கித் தொழில் பற்றிய பொது விழிப்புணர்வு, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ரீசனிங் பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், இங்கிலீஷ் லாங்குவேஜ் பிரிவுக்கு 40 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், வங்கித் தொழில் பற்றிய பொது விழிப்புணர்வுக்கு 40 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அறிவுக்கு 20 மதிப்பெண்களும் உள்ளன. இத்தேர்வு எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த ஆண்டு அக்டோபர் 03, 04, 10, 11 ஆகிய தேதிகளில் Preliminary தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். Preliminary தேர்வு முடிவை அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தகுதியானவர்களை அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வை 31.10.2015 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மெயின் தேர்வை எழுதுவதற்கான இடங்களை, பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு அனுமதி கிடையாது.
மெயின் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதும், நேர்முகத் தேர்வுக்கான தேதி முடிவாகும்.
மெயின் தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.ibps.in என்கிற இணையதளத்திற்குச் சென்று "CWE Clerks" எனும் பிரிவில் இருக்கும் “CLICK HERE TO APPLY ONLINE FOR CWE-PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES (CWE-PO/MT-V)" யை கிளிக் செய்யவும். அதில் ”Click here for new registration" பிரிவுக்குச் சென்று சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-, மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-. அத்துடன், வங்கிகளில் சேவைக் கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான முறைகள் குறித்து இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவசப் பயிற்சி:
வங்கி எழுத்துத் தேர்வு எழுதும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இலவசப் பயிற்சி அளிக்க வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு வருவதற்கான பயண செலவு, தங்குமிடம், சாப்பாட்டுச் செலவு போன்ற செலவுகளை சம்பந்தபட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பத்தில் இதுகுறித்துக் குறிப்பிட வேண்டும்.
ஆன்லைன் மூலம் கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 01.08.2015
விண்ணபதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2015
மேலும் விவரங்களுக்கு: www.ibps.in
No comments:
Post a Comment