சைக்கிள் பயன்படுத்துபவர்களை கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் மற்றும் பைக் பயன்படுத்துபவர்களை எண்ணவே முடியாது. முன்பெல்லாம், ஊருக்கு இரண்டு பெட்ரோல் பங்க் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தெருவுக்கு இரண்டு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த நிலைமையை யாராலும் மாற்ற முடியாது. பெட்ரோல் பங்க் இல்லைனா, வண்டி ஓடாதே... அதனால், பெட்ரோல் அல்லது டீசலை பெட்ரோல் பங்க்யில் அடிக்கும் போது உஷாரா இருங்க...
ஒரு லிட்டர் பெட்ரோலை, உங்களது வாகனத்திற்கு நிரப்புகிறீர்கள். அதன் விலை 70 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெட்ரோல் அடிக்கும் போது மீட்டரை மட்டும் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை பார்க்க மறந்துவிடுவோம். அது மீட்டரில் வரும் 0000 ரீசெட் இல்லைங்க. அதை பெட்ரோல் அடிக்க ஆரம்பிக்கும்போது பார்த்தால் போதும். பெட்ரோல் அடிக்கும் போது, பெட்ரோல் வால்வை ஆப்ரேட் செய்யும் விஷயத்தை கவனித்தீர்களா?. கவனித்துப் பாருங்கள். பெட்ரோல் அடிக்கும் போது, ஆப்ரேட்டர் அந்த லாக் வால்வை கையில் அசைத்துக்கொண்டே இருப்பார். இதை நிறைய பெட்ரோல் பங்க்குகளில் செய்துவருகிறார்கள்.
அவர்களுக்கு என்ன லாபம்?. நமக்கு என்ன நஷ்டம்
ஆப்ரேட்டர் அப்படி செய்யும் போது, 100 ரூபாய் பெட்ரோலுக்கு 03 ரூபாய் கிடைக்குது. ஆனால், சில பங்க் உரிமையாளருக்கே இந்த விஷயம் தெரியாது. ஆப்ரேட்டர்களே வரும் லாபத்தில் பங்கீட்டு கொள்கிறார்கள். எப்படினு கேட்குறீங்களா?. உரிமையாளருக்கு பெட்ரோல் அவுட்புட் மீட்டர் ரீடிங்கை கொடுத்தால் மட்டுமே போதும். பெட்ரோல் அடிக்கும் போது லாக்கை அசைத்துக்கொண்டே இருந்தால். ஒரு லிட்டர் பெட்ரோல் அடிப்பவர்களுக்கு 0.850 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே டேங்கிற்கு செல்லும். மீதம் ஏர்லாக் ஆகிவிடும். லாக்கை அசைத்துக்கொண்டே இருந்தால் பெட்ரோல் விட்டு விட்டு வரும். அப்படி வரும்பொழுது, முதலில் காற்று வரும். அந்த காற்றும் மீட்டரில் ஓடிவிடும். அவ்வளவுதான்.
உஷாரா இருங்க... தயவுசெய்து பெட்ரோல் அடிக்கும்போது லாக் போட சொல்லுங்கள்.. லாக் போடாமல் பெட்ரோல் அடிக்க வேண்டாம். அப்படி லாக் போடாமல் அடித்தால், 70 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை 75 ரூபாய்க்கு வாங்குவதற்கு சமம்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்..
Who is this scientist? No surprise to have such a post on the country where too many centum scorers.
ReplyDelete