சென்னை, ஆயுள் காப்பீடு கழகத்தில் 679 அப்ரண்டீஸ் வளர்ச்சி அதிகாரி பயிற்சி


எல்.ஐ.சி எனப்படும் ஆயுள் காப்பீடு கழகத்தில் சென்னை, தெற்கு மண்டல அலுவலகம் மூலம் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்களில் 679 (Apprentice Development officer) அப்ரண்டீஸ் வளர்ச்சி அதிகாரி பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
அரசுத் துறை பொது காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீடு கழகத்தில் 679 அப்ரண்டீஸ் வளர்ச்சி அதிகாரி பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தாழ்த்தப்பட்டோருக்கு 101 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 04 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 164 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 410 காலியிடங்களும் உள்ளன. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ அல்லது பி.ஜி டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
அப்ஜெக்ட்டிவ் முறையில் ஆன்லைன் தேர்வு இருக்கும். ஆன்லைனில் பேப்பர் 1, பேப்பர் 2 மற்றும் பேப்பர் 3 என மூன்று தேர்வுகள் இருக்கும். பேப்பர் 1 தேர்வில் ரீசனிங் மற்றும் Numerical ability பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 25 கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கு மொத்தம் 50 மதிப்பெண்கள். பேப்பர் 2 தேர்வுக்கு பொது அறிவு & Current affairs, English language with special emphasis on grammar and vocabularyஆகிய இரண்டு பிரிவுகளுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 25 கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கு மொத்தம் 50 மதிப்பெண்கள். பேப்பர் 3 தேர்வில் Insurance and financial marketing awareness with special emphasis on knowledge of life insurance and financial sector பிரிவில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 50 மதிப்பெண்கள் உள்ளன. மூன்று பேப்பர் தேர்வுகளையும் இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஆயுள் காப்பீடு கழகம் மூலம் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இத்தேர்வுப் பயிற்சி நடைபெறலாம். ஆன்லைன் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் டத்தப்படும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பாண்டிச்சேரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், நாமக்கல்.

விண்ணப்பிப்பது எப்படி?.
www.licindia.in என்கிற முகவரிக்குச் சென்றonline application for LIC ADO's Recruitment Exam 2015-2016)" பிரிவை கிளிக் செய்து ”Click here for new registration" யில் பெயர், முகவரி, -மெயில் முகவரி, மொபைல் நம்பர் ஆகிய விவரங்களை குறிப்பிடவும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஸ்கேன் செய்த கையெழுத்தையும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.

விண்ணப்ப கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ரூ.50/-, மற்றவர்களுக்கு ரூ.500/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2015

ஆன்லைனில் செலுத்த கடைசி தேதி: 30.06.2015

No comments:

Post a Comment