ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு புதுச்சேரி மின்சாரத்துறையில் 270 ஹெல்பர் வேலை


புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் மின்சாரத் துறையில் ஹெல்பர் (Construction) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. புதுச்சேரியை சொந்த இடமாக உள்ளவர்களும், குறைந்தபட்சம் 5 வருடம் புதுச்சேரியில் தங்கியிருந்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் அல்லது மலையாளம் அல்லது தெலுகு மொழியை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 90 காலியிடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 41 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 36 காலியிடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு (முஸ்லீம்) 05 காலியிடங்களும் உள்ளன. அதேபோன்று சில காலியிடங்கள் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. பொது பிரிவினருக்கு 45 காலியிடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 16 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 10 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 14 காலியிடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு (முஸ்லீம்) 02 காலியிடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு ஜூலை, 6 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 32 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதேபோன்று, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
எப்படி தேர்வு செய்கிறார்கள்?.
ஐ.டி.ஐ படிப்பில் பெற்றிருக்கும் சதவிகிதத்தை, 100 மதிப்பெண்களுக்கும், பத்தாம் வகுப்பில் பெற்றிருக்கும் சதவிகிதத்தை 50 மதிப்பெண்களுக்கும் கணக்கிடப்படும். ஏற்கனவே புதுச்சேரி மின்சாரத்துறையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண் வழங்கப்படும். அடுத்ததாக, எம்ப்ளாய்மெண்ட் அலுவலகத்தில் இருக்கும் சீனியரிட்டி அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். சீனியரிட்டியில் ஒவ்வொரு வருடத்திற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 175 மதிப்பெண்கள். தகுதியானர்களை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யானம் ஆகிய பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பிறந்த சான்று நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் நகல், ஐ.டி.ஐ சான்றிதழின் நகல், பிறப்பிடச் சான்று, சாதிச் சான்று நகல், எம்ப்ளாய்மெண்ட் அலுவலக பதிவு அட்டையின் நகல் ஆகியவைகளை சேர்த்து கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பு வைக்க வேண்டும்.
முகவரி: Office of the officer on special duty, Electrical department, Nethaji subhash Chandra bose salai, puducherry – 605001
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 06.07.2015
மேலும் விவரங்களுக்கு: http://electricity.puducherry.gov.in

No comments:

Post a Comment