தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏப்ரம்-24 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச தகுதியான, பத்தாம் வகுப்பு (SSLC) அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி (+2) பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் கணினி புகைப்படக் கருவிகள் (WEB Camera) மூலமாக புகைப்படம் எடுத்துக் கொண்டு, விண்ணப்ப கட்டணத்தையும் அங்கு செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க செல்லும் போது கீழ்கண்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
1. பத்தாம் வகுப்புச் சான்றிதழ்
2. சாதிச் சான்றிதழ்
3. வேலைவாய்ப்பு அட்டை
4. முன்னுரிமைக்கான சான்றிதழ்
5. உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ்
6. பணி முன் அனுபவச் சான்றிதழ்
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
தேர்வு கட்டணம் ரூ.100/- மற்றும் சேவை கட்டணம் ரூ.50/- யை அரசு தேர்வுகள் சேவை மையங்களில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை?
Screening தேர்வு நடத்தப்பட்டு 1:5 என்ற விகித அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு இணையதளத்தின் மூலம் அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்களை, பணியில் நியமிக்கப்படுவார்கள்.
தேர்வு எப்படி இருக்கும்?.
பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 120 கேள்விகள் மற்றும் பொது அறிவு பாடத்தில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 30 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு நாள்: 31.05.2015 (காலை 10 மணி முதல் 12.30 மணி வரை)
தேர்வு நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதள வாயிலாக தங்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலியிடங்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் முகவரியை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Kanyakumari -
Villupuram -
Vellore -
Thiruvallur -
Sivagangai -
Ramanathapuram -
Nilagiri -
Nagappatinam -
Erode -
Krishnagiri
Dharmapuri
Dindukkal
No comments:
Post a Comment