இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 சீனியர் மேலாளர் பணியிடங்கள்

சென்னையை மத்திய இடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சீனியர் மேலாளர் பணியில் சேர விரும்புவோர் பைனான்ஸ் துறையில் எம்.பி.ஏ அல்லது பி.ஜி டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பாங்கிங் & பைனான்ஸ் பிரிவில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொது பிரிவினருக்கு 51 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 07 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 காலியிடங்களும் உள்ளன. 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்அரசு விதிமுறைகளின்படிஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்அதாவதுஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.25700  31500/-
விண்ணப்ப கட்டணம்: ரூ.600/- (ஓ.பி.சி பிரிவினருக்கு), ரூ.100/- (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2015
மேலும் விவரங்களுக்கு: www.iob.in

No comments:

Post a Comment