மசகோன் டாக் நிறுவனத்தில் 1302 காலியிடங்கள்

மசகோன் டாக் நிறுவனத்தில் ஜூனியர் டிராஃப்ட்ஸ்மேன், ஜூனியர் இன்ஸ்பெக்டர், Junior planner estimator, ஸ்டோர் கீப்பர், ஐ.டி.ஐ டெக்னீசியன் ஆகிய பணிகளில் உள்ள 1302 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 750 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 334 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 117 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 101 காலியிடங்களும் உள்ளன. 
இந்தப் பணிகளில் சேர என்ன தகுதிகள் தேவை?..
ஜூனியர் டிராஃப்ஸ்ட்மேன் பணியில் சேர விரும்புவோர் டிராஃப்ட்ஸ்மேன் பிரிவில் ஐ.டி.ஐ சான்டிதழ் பெற்றிருக்க வேண்டும். Junior planner estimator பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், மெரைன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், மெரைன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேன்டும். ஸ்டோர் கீப்பர் பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று, ஐ.டி.ஐ டெக்னீசியன் பணியில் சேர விரும்புவோர் ஃபிட்டர், Structural fabricator, பைப் ஃபிட்டர், பிளம்பர், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் மெக்கானிக், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக், மில்ரைட் மெக்கானிக், பெயிண்டர், கார்பெண்டர், வெல்டர், ரிக்கர், டூல் & டை மேக்கர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழுடன் ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்அரசு விதிமுறைகளின்படிஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்அதாவதுஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
தேர்வு எப்படி இருக்கும்?.
ஜூனியர் டிராஃப்ட்ஸ்மேன், ஜூனியர் இன்ஸ்பெக்டர், Junior planner estimator, ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இருக்கும். அதேபோன்று ஐ.டி.ஐ டெக்னீசியன் பணிக்கு Trade தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.mazagondock.gov.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று "Career-Non-Executives" பிரிவில் இருக்கும் "ADVERTISEMENT REF.NO HR-REC-NE/75/2015" பகுதியை கிளிக் செய்து விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. சலானை பயன்படுத்தி ஸ்டேட் பாங்க் வங்கியில் ரூ.140/-யை விண்ணப்ப கட்டணம் மற்றும் சர்வீஸ் கட்டணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
3. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். தபால் கவரின் மேல் "Post Applied for:_________" என்று எழுத வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: DGM (HR-Rec-NE), Recruitment
Cell, Service Block- 3rd Floor, Mazagon Dock Limited, Dockyard Road, Mumbai-400010
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 13.03.2015

No comments:

Post a Comment