பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு 62390 கான்ஸ்டெபிள் காலியிடங்கள்

இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம இயங்கி வரும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, இந்தோ திபத்திய எல்லை போலீஸ் படை, சஷாஸ்ட்ரா சீமா பால், தேசிய புலனாய்வு அமைப்பு, சிறப்பு பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளன. 62390 கான்ஸ்டெபிள் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. 
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 
ஆண்களுக்கு: 
எல்லை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 9163 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 2882 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 1649 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 4004 காலியிடங்களும் உள்ளன. 
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 2269 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 672 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 342 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 1210 காலியிடங்களும் உள்ளன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பொது பிரிவினருக்கு 22623 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 3950 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 2345 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 4953 காலியிடங்களும் உள்ளன.
சஷாஸ்ட்ரா சீமா பால் நிறுவனத்தில் பொது பிரிவினருக்கு 2948 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 899 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 448 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 1324 காலியிடங்களும் உள்ளன.
இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 1506 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 417 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 290 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 582 காலியிடங்களும் உள்ளன.
தேசிய புலனாய்வு அமைப்பில் பொது பிரிவினருக்கு 43 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 11 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 06 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 22 காலியிடங்களும் உள்ளன.
சிறப்பு பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 142 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 17 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 36 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 52 காலியிடங்களும் உள்ளன.
பெண்களுக்கு:
எல்லை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 2465 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 793 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 458 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 1103 காலியிடங்களும் உள்ளன. 
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 255 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 79 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 37 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 136 காலியிடங்களும் உள்ளன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பொது பிரிவினருக்கு 994 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 325 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 186 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 460 காலியிடங்களும் உள்ளன.
சஷாஸ்ட்ரா சீமா பால் நிறுவனத்தில் பொது பிரிவினருக்கு 317 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 98 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 48 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 142 காலியிடங்களும் உள்ளன.
இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 162 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 46 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 31 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 67 காலியிடங்களும் உள்ளன.
தேசிய புலனாய்வு அமைப்பில் பொது பிரிவினருக்கு 02 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 01 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 01 காலியிடங்களும் உள்ளன.
சிறப்பு பாதுகாப்புப் படையில் பொது பிரிவினருக்கு 15 காலியிடங்களும்,தாழ்த்தப்பட்டோருக்கு 02 காலியிடங்களும்,பழங்குடியினருக்கு 04 காலியிடங்களும்,ஓ.பி.சி பிரிவினருக்கு 06 காலியிடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படிவிண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 23 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்அரசு விதிமுறைகளின்படிஇடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவதுஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
தேர்வு முறை?.
முதல் கட்டமாக உடல் நிலையான சோதனை மற்றும் உடல் திறன் சோதனை தேர்வு நடத்தப்படும். ரண்டு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆன்லைன் அல்லது எழுத்துத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தில்ஆன்லைனிலோ அல்லது எழுத்துத் தேர்வு மூலம் எழுதுபவராக இருந்தால் குறிப்பிடவேண்டும். 
1. உடல் நிலையான சோதனை (Physical Standard Test) 
ஆண்களுக்குஉயரம்: 170செ.மீ, மார்பளவு(80செ.மீ (Unexpanded), 5செ.மீ (Expanded)), உடல் எடைஉயரம் மற்றும் வயதிற்கு சம்பந்தமாக இருக்க வேண்டும். 
பெண்களுக்கு: உயரம்: 157செ.மீ. உடல் எடைஉயரம் மற்றும் வயதிற்கு சம்பந்தமாக இருக்க வேண்டும்.
2. உடல் திறன் சோதனை (Physical Eligibility Test)
ஆண்களுக்கு: 5 கி.மீ தூரத்தை 24 நிமிடத்தில் டி முடிக்க வேண்டும். 
பெண்களுக்கு: 1.6 கி.மீ தூரத்தை 8 1/2 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.
3. ஆன்லைன் அல்லது எழுத்துத் தேர்வு
அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும். General intelligence & ReasoningGeneral Knowledge & General awareness, Elementary Mathematics, English ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும்இத்தேர்வில் விடை அளிப்பதற்கு 60 நிமிடங்கள் அளிக்கப்படும். ஆஃப்லைன் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கேள்விகள் இருக்கும். ஆன்லைன் தேர்வில் ஆங்கில மொழியில் கேள்விகள் இருக்கும். 
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். 
விண்ணப்பிப்பதுஎப்படி?.
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 
2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும்PART-1 REGISTRATION" பிரிவுக்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும். 
3. பின்னர்"“PART-2 REGISTRATION" பிரிவுக்குச் சென்று விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டுகிரெடிட் கார்டுஇன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம்கூடவேஇதில் தங்களுடைய போட்டோவை மற்றும் ஸ்கேன் செய்த கையெழுத்தை அப்ளோடு செய்யவும். 
4. ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த விரும்புவோர், செலானை பிரிண்ட் அவுட் எடுத்த பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. 
தேர்வு நடக்கும் இடம்: சென்னை, மதுரை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி (PART 1)21.02.2015
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி (PART 2): 23.02.2015 
ஆன்லைன் தேர்வு நாள்04.10.2015
மேலும் விவரங்களுக்குRegional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamilnadu – 600006.
உதவிக்கு: 09445195946, 044-28251139
இணையதளமுகவரி: http://ssconline.nic.in & http://ssconline2.gov.in

No comments:

Post a Comment