"பகுதி நேர வேலை, தினமும் மூன்று மணி நேரம் வேலை செய்தால் போதும். வீட்டில் இருந்தபடியே, தினமும் 800 ரூபாய் விதம், ஒவ்வொரு மாதமும் 25000/- வரை சம்பாதிக்காலம்." இதுபோன்று விளம்பரம் எங்கு சென்றாலும் பிரிண்ட் அவுட் காப்பு எடுத்து கரண்ட் கம்பத்திலோ, சுவற்றிலோ ஒட்டிவிடுகிறார்கள். அப்படி இல்லையென்றால், வேலை வெட்டி இல்லாமல் மற்றவர்களை எப்படி ஏமாற்ற முடியும் என்று நினைத்துக்கொண்டு, புதுசு புதுசா யோசிச்சு. "பார்ட் டைம் வேலை, மொபைல் நம்பர் அல்லது இ-மெயில் முகவரியை கமெண்ட் பண்ணுங்கனு" பேஸ்ஃபுக் லையும் ஏமாற்ற ஆரம்பிச்சுட்டாங்க!. இதை ஏன், நம்ப வேண்டும். படித்தவர்கள் புத்திசாலிகள் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அப்படி இருந்தும், ஏன் படித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாறுகிறார்கள். காரணம், பணம். வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமானதாகிவிட்டன. ஏன், ஒரு ரூபாய் இல்லை என்றால், வந்தாரை வாழ வைக்கும் இந்த தமிழ்நாட்டில் தண்ணீர் பாக்கெட் கூட கிடைக்காது. அதுமட்டுமில்லாமல், படித்து வேலை இல்லாதவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இருக்குனு சொன்னா. கண்டிப்பா வருவாங்க, அதனாலதான் மாதம் ரூ.25000/- சம்பாதிக்கலாம் வாங்கனு சொல்றாங்க!. பார்ட் டைம் வேலைனு யாரவது சொன்னா. எட்டு மணி நேரம் வேலை செய்பவர்களுக்கே, அவ்வளவு சம்பளம் கிடைக்காத பொழுது. உங்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க எப்படி லாபம் கிடைக்கிறதுனு கேள்வி கேட்டுப்பாருங்க, பதில் சொல்லமாட்டாங்க. உஷாரா இருங்கப்பா!!
பகுதி நேரமாக மாதம் ரூ.25000/- சம்பாதிக்க முடியுமா?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment