ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமா?..

அலுவலகத்தில் சக ஊழியர்கள், ஆங்கிலம் பேசும் போது. நமக்கும் ஆங்கிலம் பேச வேண்டும் என்று மனதில் ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் தவறாக பேசிவிடுவோமோ, மற்றவர்கள் எதாவது நினைத்துவிடுவார்களோ என்ற கூச்சத்தினால் ஆங்கில வார்த்தைகள் வாயில் வழியாக வெளியே வருவதில்லை. இனியும் தயங்க வேண்டாம். அப்படி என்றால் நம்மால் ஆங்கிலம் பேச முடியுமா?. முடியும். உங்களுக்காக சில டிப்ஸ்.
1. ஆங்கில நியூஸ்பேப்பர்களை தினமும் படிக்க முடியவில்லை என்றால், நல்ல ஆங்கில கதைப் புத்தகத்தை வாங்குங்கள்.
ஈசியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கிலத்தில் இருக்கும் Chetan Bhagat எழுதிய புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். காரணம், ஆங்கிலம் படிக்க ஈசியாக இருக்கும் புத்தகம் அதுஒன்று தான். அதன் பின்னர், கடினமான ஆங்கில வார்த்தைகள் இருக்கும் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். தெரியாத ஆங்கில வார்த்தைகளை மார்க் செய்து, உங்களின் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் மூலம் அதற்கான விடையை தெரிந்துகொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
2. சினிமாவில் ஆங்கில வசனங்களை படியுங்கள்.
டி.வி யில் ஹெ.பி.ஒ அல்லது சில ஆங்கில சேனல்களை மாற்றுங்கள். அதில் ஆங்கிலப் படம் ஒடிக்கொண்டிருக்கும். அதில் கீழே வசனங்களை ஆங்கிலத்தில் போட்டுக் காட்டுவார்கள். அந்த படம் முடியும் வரை வசனங்கள் வந்து கொண்டிருக்கும். அதை நன்கு கவனித்துப் படியுங்கள். அப்படி செய்து வந்தால், ஆங்கில வார்த்தைகளை சீக்கிரம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
3. தேவையில்லா வார்த்தைகளை ஒதுக்கிவிடுங்கள்.
ஆம், "hello,  Welcome to kongumalar" என்கிற வார்த்தைகளுக்கு பதில் "Hi Friends, welcome to kongumalar"  என்று பேசினால் கொஞ்சம் நல்லா இருக்கும். நாம் பேசும் வார்த்தைகள் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், நாம் தவறு செய்யும் சில வார்த்தைகள், அருகில் இருப்பவர்களுக்கு பெரிதாக தெரியாது.
4. சரியாக பேசுங்கள்.
ஆங்கில படம் பார்க்கும் போது சில வார்த்தைகள், நமக்கு புரியாது. "Going" என்று சொல்வதற்கு பதில் "Goin" என்பார்கள், "Running" என்று சொல்வதற்கு பதில் "Runnin" என்பார்கள். காரணம், UK English க்கும், US English க்கும் உள்ள வித்தியாசம். அதைப் பற்றி தெரிந்துகொள்ள இணையதளத்தில் audio pronunciation file யை டவுன்லோடு செய்து கேளுங்கள்.
5. ஆடியோ ரெக்கார்டிங்ஸ்
ஸ்போக்கன் இங்கிலீஷ் யில் ஆடியோ ரெக்கார்டிங்ஸ்யை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். இலவசமாகவே கிடைக்கிறது.
6. சத்தமாக படியுங்கள்
வாய்க்கு டிரெயினிங் கொடுங்கள். எப்படி என்று நினைக்கிறீர்களா. ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிர்நீச்சல் நாயகன் சிவகார்த்திகேயனைப் போல் பயிற்சி எடுத்துத்தானே ஆக வேண்டும். அதே போல், வாய்க்கு பயிற்சி சத்தமாக ஆங்கிலத்தில் படிப்பது மட்டுமே. முடிந்தால், சத்தமாக படிக்கும் போது ரெக்கார்டு செய்யுங்கள். படிக்கும் போது தவறு இருந்தால் அதை சரி செய்ய உதவும்.
7. மறக்காமல் இருக்க Chart ஒட்டுங்கள்
குழந்தைகளுக்கு a to z பிக்சரை காண்பித்து கற்றுக் கொடுப்போம். அப்போது தான், குழந்தையின் மனதில் பதியும் என்பார்கள். அதேபோன்று புரியாத சில வார்த்தைகளை சார்ட் மூலம் எழுதி ஒட்டி தினமும் பாருங்கள். Vertical, horizontal என்று எப்படி நியாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக:
சார்டில்
V
E
R
T
I
C
A
L  AND HORIZONTAL  என்று எழுதிப் பாருங்கள்.
8. முக்கியமான வரிகளை தெரிந்துகொள்ளுங்கள்
At the end of the day, the fact of the matter, avoid something like the plague, in the current climate, mass exodus, few and far between. வரிகளைப் போன்று முக்கியமான சில வரிகளை தெரிந்துகொண்டு பேசுங்கள். அருகில் இருப்பவர்களை வாயை மூடிப் பேச வையுங்கள். நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
9. ஆங்கிலம் பேசும் நண்பர்களை கண்டுபிடியுங்கள்
சரளமாக ஆங்கிலம் பேச, யார் நம்மைச் சுற்றி இருக்கிறார்களோ அவர்களிடம் ஆங்கிலம் பேசினால் சீக்கிரம் கற்றுக்கொள்ளலாம். புத்தகம் படிப்பதற்கு பதில், ஆங்கிலம் பேசும் நண்பர்களிடம் நாம் தவறாக ஆங்கிலம் பேசினாலும், நண்பர்கள் சொல்லுத்தருவார்களே. தவறு செய்தால் மட்டுமே, தவறை உணர்ந்து அடுத்தமுறை அதை செய்யாமல் பார்த்துக் கொள்வோம்.
பயிற்சி செய்யுங்கள், பின்னர் ஆங்கிலத்தில் கீழே கமெண்ட் செய்யுங்கள். நன்றி.

 

 

No comments:

Post a Comment