இந்திய அரசின் கீழ் ரயில்வே அமைச்சகத்தின் மூலம் இயங்கி வரும்
இந்திய ரயில்வே நிறுவனத்தில் Staff Nurse, health & malaria inspector, pharmacist
– III, Lab assiatant, lab superintendant (Gr III) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: Staff nurse பதவிக்கு ஜெனரல் நர்சிங் & மிட்வைஃப்ரி
பிரிவில் சான்றிதல் அல்லது நர்சிங் துறையில் பி.எஸ்.சி பட்டத்துடன் இந்திய நர்சிங்
கவின்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். health
& malaria inspector பதவிக்கு வேதியியல் துறையில் பி.எஸ்.சி பட்டத்துடன் Health/
sanitary inspector பிரிவில் டிப்ளமோ சான்றிதல் அல்லது Health/ sanitary inspector
பிரிவில் நேஷனல் டிரேட் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். pharmacist – III பதவிக்கு
பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் இரண்டு வருட டிப்ளமோ சான்றிதல்
பெற்றிருக்க வேண்டும். கூடவே இந்திய பார்மசி கவின்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
Lab assiatant பதவிக்கு மெடிக்கல் லேப் டெக்னாலஜி
பிரிவில் டிப்ளமோ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். lab superintendant பதவிக்கு பயோ-கெமிஸ்ட்ரி,
மைக்ரோ பயோலஜி, லைஃப் சயின்ஸ், மெடிக்கல் டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில்
பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: பொது பிரிவினருக்கு 616 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு
129 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 106 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு
139 காலியிடங்களும் உள்ளன. அதில் சென்னைக்கு 76 காலியிடங்கள். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக்
குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று
ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில்
விலக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு
எப்படி நடைபெறும்?
அப்ஜெக்ட்டிவ் முறையில்
எழுத்துத் தேர்வு இருக்கும். பொது அறிவு, அரித்மெட்டிக், general intelligence, general
science மற்றும் ரீசனிங் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள்
கேட்கப்படும். இத்தேர்வில் விடை அளிப்பதற்கு 90 நிமிடங்கள் அளிக்கப்படும். எழுத்து
தேர்வில் நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது தவறாக பதிலளிக்கும் ஒவ்வொரு
கேள்விக்கும் 1/3 மதிப்பெண், பெறும் மொத்த மதிப்பெண்களில் இருந்து கழிக்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்த்தல்
மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல்களுக்கு வந்து செல்ல இரண்டாவது வகுப்பு ரயில்
டிக்கெட் கட்டணம் இல்லை என்றும், டிக்கெட்டுக்கு பதில் ticket checking staff யிடன்
ஒரிஜினல் சாதிச் சான்றிதலை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. பொது
மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- (ஆண்களுக்கு மட்டும்).
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
கிடையாது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
2.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக
விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் இருக்கும் “NEW REGISTRATION" பிரிவுக்குச்
சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3.
பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன்
விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும்
இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.
4.
செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட்
ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்
பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2014
எழுத்து
தேர்வு நடைபெறும் நாள்: 08.02.2015
மேலும்
விவரங்களுக்கு: www.rrbchennai.gov.in
No comments:
Post a Comment