வந்தாச்சு பேசும் குப்பைத்தொட்டி
ஒரு காலகட்டத்தில் குப்பை தொட்டிக்கு மட்டும் வாய் இருந்தால் கண்டிப்பாக அழுவும் என்று கற்பனையில் நினைத்து சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த கற்பனையை நிஜமாக மாற்றியிருக்கிறார் ஒரு படிக்காத விங்ஞானி. பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த குப்பைதொட்டியை வைக்கும்பொழுது, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஒலி அமைப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த தொட்டி உள்ள இடத்தில் இருந்து 20 மீ தொலைவில் மனிதர்கள் செல்லும் போது, திடீரென மூடப்பட்டிருக்கும் தொட்டி திறக்கப்பட்டு, "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்', "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’'’’ உள்ளிட்ட சுகாதாரம் குறித்த வாசகங்கள் ஒலிக்கிறது. அதன்பிறகு 20 மீ தொலைவில் இருந்த நாம் விலகி விட்டால், தொட்டி தானாக மூடிவிடுவதோடு, விழிப்புணர்வு ஒலியும் அடங்கி விடும் வகையில் தயார் செய்துள்ளார். இந்த புதுமையான குப்பைத்தொட்டியை கண்டுபிடித்த படிக்காத விங்ஞானி யார்?. அவர், தர்மபுரியைச் சேர்ந்த ஜெயபாண்டியன். பத்து வயதில் இருந்து அறிவியல் கண்டுபிடிப்புக்காக முனைந்து செயல்பட்டு வருகிறார். ”சாதாரண பிளாஸ்டிக் குப்பைதொட்டியில் மின் மாற்றி மூலம் 20 மீ தொலைவில் மனிதன் உள்ளிட்ட உயிரூட்டமுள்ளவர்கள் நடந்துச் செல்லும் போது, நம் உடலில் இருந்து வெளியேறும் மின் ஒலி அலைகள் மூலம் கவரப்பட்டு, தொட்டி தானாக திறக்கும். அதே போன்று பஸ் ஸ்டாண்ட் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடங்களில் இந்த குப்பைதொட்டியை பொருத்தினால், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் வந்தவுடன் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிப்பது போலவும் இதை பயன்படுத்தலாம்” என்றார் ஜெயபாண்டியன்.
பேசும் குப்பைதொட்டி மட்டும் இல்லாமல் சாட்டிலைட் வாட்டர், ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, புல்டவுசர் படகு உள்ளிட்ட 40 வகையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். சாட்டிலைட் வாட்டர் ரேடியோவை 3ஜி போன் மூலம் உலகில் எங்கு இருந்தாலும் இயக்க முடியும் என்கிறார் ஜெயபாண்டியன். ”ஒருபொருளை மேலோட்டமாக பார்த்தவுடன், அந்த பொருளை குறுகிய காலத்திலேயே ஜெயபாண்டியன் செய்துமுடித்திடுவார். அவர் செய்யும் பொருட்கள் அனைத்துமே புதுமையான ஒன்றாக உள்ளது. கோவில் உண்டியில் காசை போட்டவுடன் சென்சார் மூலம் சாமி முன் இருக்கும் லைட் மற்றும் ட்ரம்ஸ் ஸ்விட்ச் ஆனாகிவிடுகிறது. தற்போது வீட்டில் வேலை செய்யும் ரோபோவை கண்டுபிடித்துள்ளார். அதற்கு உண்டான வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம்” என்றார் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஸ்ரீதர் (லேத் வேலை செய்பவர்).
இது போன்று புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் அனைவரும் எளிய பொருட்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமுக ஆர்வலர்கள் மூலம் தர்மபுரியில் மியூசியம் அமைக்கவுள்ளார். அங்கு வைக்கபட்டிருக்கும் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு, அதன் செய்முறை விளக்கங்களை அறிந்து கொண்டு, தாங்களே இது போன்று வேறு வடிவங்களில் செய்ய முயற்சிகளும் செய்யலாம். புதிய கண்டுபிடிப்புக்கு தூண்டுதலாக இருக்கும் ஜெயபாண்டியனை கண்டிப்பாக வாழ்த்தியே ஆக வேண்டும்.
96982 - 48008 ஜெயபாண்டியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment