தமிழக அரசின் மருத்துவத்துறையில் காலியாக உள்ள 1,727 சிறப்பு உதவி மருத்துவர் (Assistant Surgeon) Specialist பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கு பின்னர் சிறப்பு பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள:
மயக்கவியல்- 453, உடலமைப்பியல்- 23, உயிரி வேதியியல்- 11, தோல் நோய் நிபுணர்- 16, நீரழிவு நோய் நிபுணர்- 1, காது, மூக்கு, தொண்டை நிபுணர்- 9, தடய அறிவியல் துறை- 29, பொது மருத்துவம்- 100, பொது அறுவை சிகிச்சை- 63, மூப்பியல் துறை- 1, நுண்ணுயிரியல்- 5, மகப்பேறு இயல்- 557, கண்ணியல்- 17, முடநீக்கவியல்- 27, குழந்தைகள் நலன்- 84, நோய் காண்துறை- 27, மருந்தியல்- 20, உடலியல் மற்றும் புனர்வாழ்வுத்துறை- 10, உடல் இயக்கவியல்- 14, உளவியல்- 14, ரேடியோ டயாக்னசிஸ்- 33, ரேடியோ தெரபி- 7, சமூக தடுப்பு மருந்து துறை- 28, காசநோய் துறை- 16, இதயவியல்- 20, குடல் மருத்துவம்- 1, புற்றுநோய்த்துறை- 4, சிறுநீரகவியல்- 18, நரம்பியல்- 18, இதய அறுவை சிகிச்சை- 10, நரம்பு அறுவை சிகிச்சை- 23, குழந்தைகள் அறுவை சிகிச்சை- 22, பிளாஸ்டிக் சர்ஜரி- 17, புற்றுநோய் அறுவை சிகிச்சை- 5, சிறுநீர்ப்பைத் துறை- 19, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை- 5. மொத்தம்- 1,727.
சம்பளம்:
ரூ.15,600- 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
வயது: பொதுப்பிரிவினர் 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு 48க்குள்.
கல்வித்தகுதி:
எம்பிபிஎஸ் படிப்புடன் சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவப் படிப்பில் முதுநிலை டிப்ளமோ/ முதுநிலை பட்டம்/ சூப்பர் ஸ்பெஷாலிட்டி பட்டம்/ டிஎன்பி. 1914 சென்னை மெடிக்கல் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட மருத்துவராக பிராக்டீஸ் செய்திருக்க வேண்டும். 12 மாதங்களுக்கு குறையாமல் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் இந்த விளம்பரம் வெளியாவதற்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு ரூ.375. இதை இந்தியன் வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் முதுநிலை படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஒரு சிறப்பு மருத்துவ பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர் இல்லாத பட்சத்தில் முதுநிலை டிப்ளமோ படித்தவர் பரிசீலிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் :
1.12.2014.
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்:
3.12.2014.
No comments:
Post a Comment