குக்கிராமங்களில் “ குடும்பத்தை கவனித்தால் போதும்” என்று குறுகிய வட்டத்துக்குள் அடக்கப்பட்ட பெண்கள் இன்றைக்கு இல்லாத துறைகளே இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக ஈரோடு அருகே புதூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவைப் பார்ப்போம்.
கூலித்தொழிலாளியின் மகள் முதுகலைப்பட்டம் படித்துக் கொண்டு ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் நிறைய சாதனைகளை படைத்து வருகிறார். சரி இந்த சாதனைகளைப் பற்றி அவரிடமே கேட்போம்.
”ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஹாக்கி விளையாடத் தொடங்கினேன். பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முதன் முதலாக தமிழ்நாடு ஹாக்கி டீமிற்காக ஆந்திர பிரதேஷ் சென்று இரண்டாமிடத்தை பிடித்து பதக்கம் வென்றேன். அதன் பிறகு மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைப் படைத்தேன். என்னுடைய சாதனையைப் பார்த்த ஹாக்கி கோச்சர், நிறைய பயிற்சி கொடுத்தார். ஹிமாச்சல் பிரதேஷத்தில் பெண்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். அதுமட்டும் இல்லாமல் ஈரோட்டில் இருந்து தமிழ்நாடு டீமிற்கு விளையாடுவதற்காக நான் மட்டும் தான் தேர்வு பெற்றேன். அந்த போட்டியிலும் வெற்றி.
தற்போது கல்லூரியிலும் தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை பெற்று வருகிறேன் “ என்று கூச்ச சுபாவத்துடன் மென்மையாகப் பேசுகிறார் சங்கீதா.
தேசிய அளவு விளையாட்டில் எந்த டீம ஜெயிக்கிறது கஷ்டம்?.
” ஜெயிக்கிறதுக்கு கஷ்டமான டீம்னா பஞ்சாப் தான். அந்த டீம்ல எல்லாரும் சூப்பரா கோல் போடுவாங்க. அவிங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் கோல் போட முடியாது. அப்படி இருந்தும் தமிழ்நாடு டீம்னால இரண்டு கோல் போட முடிந்தது ” என்றார் சங்கீதா.
ஹாக்கி விளையாட்டிற்காக தற்போது என்ன முயற்சி செய்துவருகிறீர்கள் ?.
குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் விளையாடினோம். முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்றோம். மூன்றாவது சுற்றில் வெற்றி பெற முடியவில்லை. இதனை அடுத்து பயிற்சியாளர் உதவியால் சர்வதேச அளவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை செய்துவருகிறேன்.
ஹாக்கியை தவிர வேறு விளையாட்டில் ஆர்வம் உண்டா?.
கால்பந்து,கோ-கோ போன்ற விளையாட்டிலும் வெற்றி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளேன். அதுமட்டும் இல்லாமல் நான் என் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணுக்கும் ஹாக்கி விளையாட்டில் எனுக்குத் தெரிந்த பயிற்சியை கொடுத்து வருகிறேன்.
கிராமங்களில் பெண்களை தனியாக வெளியே விட்டால் அக்கம் பக்கத்தினர் ஏதாவது சொல்லுவார்கள் என்று பெற்றோர்கள் தயங்குவார்கள், நீங்கள் எப்படி?.
” முதலில் நானும் சங்கீதாவை வெளியூருக்கு அனுப்ப மறுத்தேன். பிறகு சங்கீதாவின் கோச்சர் போன் செய்து “உங்கள் பெண் ஹாக்கி நன்றாக விளையாடுகிறாள். வெளியூருக்கு அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் பெண் எதிர்காலத்தை நினைத்து முடிவெடுங்கள்” என்று அவர் எடுத்துச் சொன்னபிறகு. நான் வெளியூருக்கு அனுப்பினேன் ” என்கிறார் சங்கீதாவின் தந்தை.
பெற்றோர்கள் கூலிவேலை செய்து வருகிறார்கள். வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றால் நிறைய செலவாகுமே. எப்படி சமாளித்தீர்கள்?.
” கூலி வேலைனா எல்லா நாளைக்கும் வேலை இருக்காது,அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளிக்கவே சரியாகிவிடும். என்னுடைய அம்மா கடன்வாங்கி கொடுப்பார், பிறகு கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார் “ என்கிறார் சங்கீதா.
குறைந்த வருமானத்திலும், உங்கள் இரண்டு மகள்களையும் பட்டப்படிப்பு படிக்க வைத்திருக்கிறீர்கள்?.
”நாங்கெல்லாம் படிக்காத நாலதா,இப்படி கூலி வேலை செஞ்சுகிட்டு இருக்கோம். எங்கள மாதிரி அவிங்கலும் கஷ்டப்பட கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் படிப்புதான் கூடவே வரும். என்னுடைய முதல் மகள் பி.காம் படித்துள்ளார். சங்கீதா தற்போது கல்லூரியின் உதவியால் எம்.சி.ஏ படித்து வருகிறார். ஹாக்கி விளையாட்டிலும் நிறைய சாதனைகளை படைத்து வருகிறார்” என்று பெருமையாகச் சொல்கிறார் சங்கீதாவின் தந்தை.

No comments:
Post a Comment