ப்ளாஸ்டிக் டெக்னாலஜி


நாம் எதை மறக்கின்றோமோ இல்லையோ,செல்பேசியை மட்டும் மறந்துவிடுவதில்லை. தற்போது அந்த செல்பேசி சிலிம் ஆக வருவதற்கு காரணமும் ப்ளாஸ்டிக் பொருட்கள் தான்.
ஒவ்வொருவரின் ஆயுதமும் பேனா என்று சொல்வார்கள்,அந்த ஆயுதத்தை தயாரிக்க உதவுவதும் ப்ளாஸ்டிக் பொருட்களே. அதுமட்டுமா தாகத்தை தவிர்க்க உதவும் தண்ணீரைக் கூட ப்ளாஸ்டிக் பொருட்களில் தானே சேகரித்தி வைக்கிறோம். குளிர்பானங்களாக இருந்தாலும் ப்ளாஸ்டிக் பாட்டில் தான். வீட்டிற்கு தேவைப்படும் நாற்காலி முதல் டி.வி வரை அனைத்தும் ப்ளாஸ்டிக் என்ஜினியர்களின் பங்களிப்பு உள்ளது. கன்டைனர்கள்,பைப்,ஆட்டோமொபைல் பாகங்கள் உள்பட அனைத்தும் ப்ளாஸ்டிக் என்ஜினியர்களின் செயல்பாடுகளே. மெடிக்கல் பிரிவில் புதிய மெட்டிரியல் மற்றும் டெக்னாலஜி மூலம் எக்யூப்மெண்டை தயாரிக்கவும் உதவுகிறார்கள் ப்ளாஸ்டிக் என்ஜினீயர்கள். கான்கிரிட்,மரம்,மற்றும் இரும்புகளுக்கு பதிலாகவும் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஏன் நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த எழுத்துகளை டைப் அடிக்க உதவும் கீபோர்ட்,கணினி போன்ற பொருட்களும் ப்ளாஸ்டிக் என்ஜினீயர்களின் உதவிகள் இருக்கின்றது. இப்படி ப்ளாஸ்டிக் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. அப்படி என்றால் வேலை வாய்புகள் எப்படி இருக்கும்.

ப்ளாஸ்டிக் என்ஜினியரிங் படிப்பவர்களுக்கு வேலை வாய்புகள் எப்படி?

ப்ளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழிற்சாலைகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. டிரான்ஸ்போர்ட் செக்டார்,பாக்கிங்,எலக்ட்ரிசிட்டி மற்றும் தொலைதொடர்பு போன்ற இடங்களில் ப்ளாஸ்டிக் மற்றும் பாலிமர் படித்து முடிப்பவர்களுக்கு இந்த துறைகளில் ஏகப்பட்ட வேலை வாய்புகள் உள்ளது.
ப்ளாஸ்டிக் என்ஜினீயர்கள் மினிஸ்ட்ரி ஆப் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, ஆயில் மற்றும் எரிவாயு கமிஷன், ஆயில் இந்தியா லேபாரெட்டரி, பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் ப்ளாண்ட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கார்பரேசன் ஆப் டிபரன்ட் ஸ்டேட், பெட்ரோலியம் கன்சர்வேசன் ரிசெர்ச் அசோசியேசன் ஆப் இந்தியா உள்பட பல அரசு நிறுவனங்களில் அமர்த்தப்படுகிறார்கள்.
தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ப்ளாஸ்டிக் என்ஜினீயர்கள் பணிபுரிகிறார்கள். பாலிமர் அல்லது ப்ளாஸ்டிக் படிப்பும், சைன்ஸ் ஆப் பாலிமரை பற்றி தெரிந்திருப்பவர்கள், ரா மெட்டிரியலை ரிசர்ச் மற்றும் டவலப்மெண்ட் செய்கிறார்கள்.


ப்ளாஸ்டிக் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்?

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேரலாம். பிளஸ் டூ படித்த மாணவர்கள் டிப்ளமோ படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்ந்து படிக்கலாம். டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி இன் சைன்ஸ் படித்தவர்கள் நேரடியாகவும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேரலாம். அல்லது மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பி.டெக் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படுகிறார்கள். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இப்படிப்பைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் ப்ளாஸ்டிக் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ”டான்செட்” நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். அல்லது அகில இந்திய அளவில் நடத்தப்படும் ’கேட்’ தேர்வை எழுதியிருக்க வேண்டும். பி.டெக் இன் கெமிக்கல்/ப்ளாஸ்டிக்/ரப்பர்/மெக்கானிக்கல்/டெக்ஸ்டைல் படித்தவர்கள் எம்.டெக் இன் ப்ளாஸ்டிக் டெக்னாலஜி படிக்க தகுதியானவர்கள். வேதியியல் அல்லது இயற்பியலில் எம்.எஸ்.சி டிகிரி படித்தவர்களும் எம்.டெக் இன் ப்ளாஸ்டிக் டெக்னாலஜியை படிக்கலாம்.

சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் ப்ளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி

டிபார்ட்மெண்ட் ஆப் கெமிக்கல் அண்ட் பெட்ரோ கெமிக்கல், மினிஸ்ட்ரி ஆப் பெட்ரோலியம் அண்ட் கெமிக்கல், மற்றும் இந்திய அரசும் இனைந்து 1968 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. சர்வதேச தரத்தில் ப்ளாஸ்டிக் டெக்னாலஜிற்கு தேவையான பயிற்சிகளை கொடுக்கின்றன. இந்தியாவில் CIPET யின் ரீஜனல் எக்ஸ்டென்சன் சென்டர்கல் அக்மதாபாத், அம்ரிஸ்டர், போபால், புவனேஸ்வர், லக்னோ, ஹைதராபாத், மைசூர், பாட்னா, கோவா போன்ற மாநிலங்களில் உள்ளது. பி.எச்.டி இன் பாலிமர் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி மற்றும் பாலிமர் என்ஜினீயரிங் படிப்பை படிக்க முக்கியமான சென்டர் யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் தான்.
சென்னையில் இருக்கும் CIPET இன் முகவரி
CIPET,
கார்ப்ரேட் ஆபிஸ்,
கிண்டி,
சென்னை-32.


ப்ளாஸ்டிக் டெக்னாலஜி படித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கலாம்?.

ப்ளாஸ்டிக் டெக்னாலஜி படித்தவர்கள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தால் குறைந்தது 8000 முதல் 10000 வரை மாத வருமானம் பெறலாம். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தால் குறைந்தது 9000 முதல் 12000 மாத வருமானம் பெறலாம். எம்.டெக் டிகிரி படித்தவர்கள் குறைந்தது 15000 முதல் 20000 மாத வருமானம் பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment