பேஸ் புக், ட்விட்டர் போன்ற வசதிகளுடன் வருகிறது கூகுள் டி.வி



பிரபல இணையதள தேடுதல் நிறுவனமான கூகுள் நிறுவனம், தொலைக்காட்சி வியாபாரத்திலும் இறங்க இருக்கிறது. தனக்கே உரித்தான புத்தாக்க பாணியில், தனது அந்த்ராய்ட் செயல் திறன் மூலம் சோனி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் டிவியை வழங்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சோனி நிறுவனம், இன்டெல், லாகிடெக் போன்ற நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
கூகுள் டிவி என்றழைக்கப்பட இருக்கும் இப்புது வகை தொலைக்காட்சியில் ஆட்டம் ப்ராஸசர் இருப்பதனால் பேஸ் புக், ட்விட்டர், யு-டியூப் போன்ற இனைய தளங்களை கணினியில் பார்ப்பது போன்றே தொலைக்காட்சியிலும் பார்க்க முடியும். கூகுள் நிறுவனம் செட்-டாப் பாக்ஸையும், சோனி நிறுவனம் டி.வியையும், இன்டெல் நிறுவனம் ஆட்டம் ப்ராஸசரையும், லாகிடெக் நிறுவனம் கீ-போர்ட் போன்று இருக்கும் ரிமோட்டையும் தயாரிக்க உள்ளார்கள்.
கூகுள் நிறுவனம் தயாரிக்கும் அந்த செட்-டாப் பாக்ஸில் ப்ளூடூத், ஐ.ஆர், வயர்லெஸ், இதர்நெட் போன்ற வசதிகளும் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் அதில் கூகுள் க்ரோம் என்கிற ப்ரவ்சர் இருப்பதனால் அனைத்தையும் ஒரே திரையில் பார்க்க முடியும். செட்-டாப் பாக்ஸை டி.வியின் உள்ளேயே பொருத்தி விடுகிறார்களாம்.
முதலில் டி.வியை ஆன் பன்னும் போது கூகுளின் தேடுதல் இயந்திரம் தெரிகிறது, அதில் நமக்கு பிடித்த சேனல் பெயரை டைப் அடித்தால் போதும். அல்லது இயந்திரத்தில் உடன்பாடு இல்லை என்றால் சேனலை மாற்றினால் தற்போதுள்ள டி.வியின் வசதிகளே வந்துவிடுகிறது. அந்த டி.வியில் கேபிள் மற்றும் வயர்லெஸ் மூலமும் பயன் படுத்திக் கொள்ளலாம். அதில் ப்ளுரே பிளேயரும் இருப்பதனால் சிறப்பம்சம்.
அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது அந்த டி.வி, அப்படினா விலை அதிகமாக இருக்கும் என்ற கேள்விகள் நிறைய எழுந்தது. அதற்கு கூகுள் டி.வியின் ப்ராடக்ட் மானேஜர், சலாகுதின் சவுத்ரி பதில் அளித்துள்ளார். அதில் ”விரைவில் கூகுள் டி.வி வெளிவரும், அதனின் விலை 150 டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது” என்றிருக்கிறது.

No comments:

Post a Comment