நகைச்சுவைகள்


1. மைசூர் அரண்மனைக்குச் சென்றிருந்த மிஸ்டர் மொக்கை, சுற்றிப் பார்த்த களைப்பு தீர ஓரிடத்தில் உட்கார்ந்தார். உடனே அரண்மனைக் காவலர் அவரிடம் ஓடோடி வந்தார்.
"இங்க உட்காரக் கூடாது! இது திப்பு சுல்தானோட ஸீட்"
"அரே பாய்! டோண்ட் வொர்ரி! அவர் வந்தா நான் எந்திரிச்சிடுறேன்"

2. டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது

மிஸ்டர் மொக்கை : சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.

3. மிஸ்டர் மொக்கையின் நண்பர் செஸ் விளையாடலாமா? என்று கேட்டதற்கு. அதற்கு மிஸ்டர் மொக்கை ”ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!” என்று பதில் அளித்தார்.

4. மிஸ்டர் மொக்கை எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.

மிஸ்டர் மொக்கையும், “சரி நாளை வருகிறேன்” என்றார்.

ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்து “ஏன் வரவில்லை..?” என்று மிஸ்டர் மொக்கையிடம் கேட்டதற்கு.

“ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை” என்று பதிலளித்தார்.



5. மிஸ்டர் மொக்கை புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க சென்னையில் இருந்து ஊட்டிக்கு கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் மெசேஜ் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

மிஸ்டர் மொக்கை: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?



6. பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், மிஸ்டர் மொக்கை நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

மிஸ்டர் மொக்கை சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”.


7. ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மிஸ்டர் மொக்கை: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !!!!!!

No comments:

Post a Comment