செராமிக் டெக்னாலஜி


களிமண்,ஸிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டது செராமிக். நாம் எங்கு சென்றாலும் வண்டியை மறந்து செல்வதில்லை. அந்த வண்டியை இயக்குவதற்கு ஸ்பார்க் பிளக் உதவுகிறதல்லவா!. அதனை தயாரிப்பதில் செராமிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பங்களின் பங்கு முக்கியமானது. அதுமட்டும் இல்லாமல், நாம் அடிக்கடி கண்ணாடியை பார்க்கின்றோமே, அதனை தயாரிக்கவும் செராமிக் என்ஜினீயர்களின் பங்கு உள்ளது. எந்த எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்தாலும் அதில் செராமிக் என்ஜினீயர்களின் பங்கு இருக்கும். அதிகபட்ச வெப்பத்தையும் தாங்கக் கூடிய பொருள் செராமிக் தான். அதனால் தான் செராமிக் பொருட்களை எலக்ட்ரானிக் பொருட்களில் பயன்படுத்துகிறார்கள். குறைந்த விலையில் வாங்குகிறோமே பீங்கான் பொருட்கள், அதில் நிறைய வடிவங்கள் இருக்கிறது, அதனை உருவாக்க பயன்படுத்துவதும் செராமிக்கே. நாம் கனவில் கூட நினைக்க முடியாத பொருட்களை உருவாக்குவதும் செராமிக் என்ஜினீயர்கள் தான். வீட்டிற்கு அலகு சேர்பதற்காக டயில்ஸ் பயன்படுத்துகிறோமே, அதனை உருவாக்க பயன்படுத்தும் பொருட்களும் செராமிக் தான். இதை எல்லாம் விட செராமிக் என்ஜினீயர்கள் புதுமையான ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள். அதற்கு பெயர் தான் செராமிக் என்ஜின். இது மற்ற என்ஜின் களை விட அதிக வெப்பத்தை தாங்கக் கூடியது.
இந்த செராமிக் தொழில் நுட்பம் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. நமது உடலில் இருக்கும் எலும்பு,பற்கள் போன்றவற்றை நோயினால் பாதிக்கப் பட்டால். அதனை மாற்றி செயற்கை எலும்பும்,பற்களும் வைக்கிறார்களே, அவற்றை உருவாக்க பயன்படுவதும் செராமிக் பொருட்கள் தான். மேலும் பானைகள்,ஸ்பார்க் பிளக்குகள்,எலக்டரிகல் இன்சுலேட்டர்கள்,கட்டிங் உபகரணங்கள்,பேரிங்க்ஸ் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
தற்போது செராமிக் உதவியால் நெடுஞ்சாலைகலையும், பாலங்களையும் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். செராமிக் டெக்னாலஜி படிக்கும் மாணவர்கள் கெமிக்கல்,வேதியியல் (தயாரிப்பதற்கு) ,மெக்கானிக் (பொருட்களின் வலிமையை கண்டு பிடிப்பதற்கு) போன்ற துறைகளையும் கற்றுக்கொள்கிறார்கள்.

செராமிக் என்ஜினீயரிங் தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்?

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேரலாம். பிளஸ் டூ படித்த மாணவர்கள் டிப்ளமோ படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்ந்து படிக்கலாம். தமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செராமிக் என்ஜினீயரிங் பட்டப்படிப்பைப் படிக்கலாம். இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இப்படிப்பைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் செராமிக் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ”டான்செட்” நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். அல்லது அகில இந்திய அளவில் நடத்தப்படும் ’கேட்’ தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

இந்த படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி?.

கண்ணாடி தொழிற்சாலை, எக்குத் தொழிற்சாலை, நியூக்ளியர் ஆலைகள், சிமெண்ட், மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் செராமிக் என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. செராமிக் சூப்பர் கண்டக்டர் மூலம் மிக வேகமாக வேலை செய்யும் கணினி மற்றும் கிளாஸ் ஆப்டிக்கல் பைபரை தயாரிக்கும் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலமே நல்ல வேலை வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. செயிண்ட் கோபைன்,எஃப்.எல்.சிமித்,ரிலையன்ஸ்,எஸ்.ஆர் உள்பட பல்வேறு நிறுவனங்களில் செராமிக் என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அடிப்படையில் எதையும் ஆய்ந்து நோக்கும் குணம் உள்ளவர்களும் விஞ்ஞான மனப்பான்மை உடையவர்களும் செராமிக் துறைக்கு ஏற்றவர்கள். தொழில் நிறுவனங்களில் சாதாரணப் பொறியாளராகச் சேர்ந்து நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வரை எட்டிப்பிடித்த திறமையான செராமிக் என்ஜினீயர்களும் இருக்கிறார்கள். இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான துறைகளில் ஆர்வமிக்க மாணவர்களுக்கேற்ற பொறியியல் படிப்பு ,செராமிக் என்ஜினீயரிங்.

No comments:

Post a Comment