தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் குறைவுதான் என்று வெளிநாடுகளில் வேலை தேடும் பலருக்கு ஒரு வேண்டுகோள்.
என்ன தான் இருந்தாலும், இந்தியாவைப் போன்று சுதந்திரமான நாடு எங்கும் இல்லை என்று வெளிநாடுவாழ் இந்தியர்களின் கருத்து. நம் தமிழகத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் நிம்மதியான குடும்ப வாழ்க்கை இருக்கிறது என்றும் சிலரின் கருத்து. பணம் சம்பாதித்து மறுபடியும் தமிழ்நாடு வந்துவிடலாம் என்று செல்பவர்களின் நிலைமையை கேட்டால் மிகவும் பரிதாபம். டிகிரி படித்து நிறுவனம் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை. ஆனால், பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு படித்து புரோக்கர் மூலம் வெளிநாடு செல்பவர்களின் நிலையை கேட்டால், கண்ணீர் மட்டும்தான். கஷ்டமான வேலைகளை செய்வதற்காக, புரோக்கர் மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். கடினமான வேலைக்கு ஏற்றதுபோல் தான் சம்பளம். நாம் சம்பளத்தை மட்டுமே பார்க்கிறோம்.
இதோ உண்மைச் சம்பவத்தை படியுங்கள்.... "புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 இளைஞர்கள் புரோக்கர் மூலம் துபாய் செல்கிறார்கள். எட்டு மாதமும் கஷ்டமான பணி, காலநிலையும் ஒத்துழைக்கவில்லை என்று தன் குடும்பத்திடம் தெரிவிக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சம்பளம் ரூ.25000/- ஆக இருந்தாலும் கடினமான வேலை நாங்கள் விரைவில் இந்தியா வந்துவிடுவோம் என்கிறார்கள். 2016 ஜனவரி 01 ஆம் தேதி அன்று நண்பர்களுடன் பார்டிக்கு செல்ல, 21 வயதுள்ள ஒரு இளைஞன் காணாமல் போகிறான். 7 நாட்களுக்கு பின்னர், அந்த இளைஞனை யாரோ அடித்து கொன்றுவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் அந்த குடும்பம் 21 வயது இளைஞனை இழந்துள்ளது". இதுபோல் பல தமிழர்கள், பல நாடுகளில் இருக்கிறார்கள். பணம் இன்று இல்லையெனில், நாளை கிடைக்கும். உயிர் இன்றுபோனால் நிச்சயம் திரும்ப வராது...
வெளிநாடுகளில் புரோக்கர் மூலம் வேலைக்கு செல்வதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள். அப்படியே சென்றாலும், தினமும் அங்கு நடக்கும் விஷயங்களை குடும்பத்திடம் தொலைபேசி மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனையெனில், இந்தியாவின் உதவி கிடைக்கும்.
No comments:
Post a Comment