வாட்ஸ்ஆப் யில் வரும் செய்தியை படித்தால், நடுத்தெருவில் தான். இனி மேலும் இந்த தவறை செய்யாதீர்கள்.. மேலும் படிக்க...


"10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10000 ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.
உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015" இந்த செய்தியை படித்து முனுசிபல் அலுவலகத்தில் கேட்டு ஏமாந்தவர்கள் தான் அதிகம்.


இதுபோன்ற ஊக்கத்தொகை திட்டத்தையே மத்திய அரசு அறிவிக்கவில்லையாம். அப்புறம் எப்படி உயர்நீதிமன்ற உத்தரவு எண். எதற்கு எடுத்தாலும், கூகுள் தேடல் செய்வோம். ஆனால், இதற்கு மறந்துவிட்டோம். அந்த உயர்நீதிமன்ற உத்தரவு எண் கோவிலுக்கு செல்பவர்களின் ஆடைகட்டுப்பாட்டுக்கு கொடுத்தது. WP (MD) NO.20559/2015