தமிழ்நாட்டில், ஒவ்வொரு மக்களுக்கும் 30,000 ரூபாய் கடன். தமிழக மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்?.


குடிசை வீடுகளை மாற்றுவதற்காகத் தான், பசுமை வீடுனு அரசு கொண்டுவந்தது.. கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள் எல்லாம் பசுமை வீடு கட்டியிருக்கிறார்கள். இதிலும் ஊழல். பங்களா இருப்பவர்களுக்கு எல்லாம் பிணாமி பெயரில் பசுமை வீடு அப்ரூவல்... அரசுக்கு தெரியாமலே கூட இது நடந்து வருகிறது. அரசியல்வாதிகளும் அனுபவிக்கிறார்கள்..

இப்படி இருந்தா, நம்ம நாட்டுக்கு கடன் சுமை வராம என்ன ஆகும். நான்கு வருடத்தில் 90,000 கோடியில் இருந்து 2 லட்சம் கோடி ஆயீடுச்சுனு சொல்றாங்க!!!!. நிறுவனங்களைப் போல தான், தமிழ்நாடும். கடன் சுமை இருக்குனு தெரிந்தும், தேவையற்ற செலவுகளை குறைத்திருக்கலாம். (எடுத்துக்காட்டாக: ஈரோட்டுக்கு, பாதாள சாக்கடை இப்பத் தேவையா?. இதுல வேற ரோடு போடனும். இதற்கு செலவாகும், 200 கோடியை குறைத்திருக்கலாம் அல்லவா?).
உங்களை நம்பிதான், ஏழை மக்கள் இருக்கிறார்கள்..

1000 ரூபாய் வாங்கி ஓட்டு போட்டவர்கள் எல்லாம் இனிமேலாவது பணம் வாங்காமல் சிந்தித்து ஓட்டுப்போடுங்கள்.... ஊழலை உருவாக்கியதே நம்ம தான்.. கோயில் பூசாரிகளுக்கு தட்டுல காசு போடுறதும் லஞ்சம் தான்.. சாமிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் உண்டியில் போடுங்க...

No comments:

Post a Comment