முதலில், இதற்கு போடுங்கள் தடை

தமிழகத்தில் நூடில்ஸ் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி. ஆனால், என்னதான் நீங்கள் தடை செய்தாலும், டி.வி.யில் விளம்பரம் வந்துட்டுதான இருக்கு. டி.வியை பார்த்துதான் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள். அப்படி இருந்தும், தவறான பொருட்களை தான் விளம்பரம் செய்கிறார்கள். மேகி மற்றும் இதர நூடில்ஸ்கள் அதிகமாக விற்பனை ஆனதற்கு. விளம்பரமே காரணம். தயவுசெய்து, விளம்பரத்திற்கு தடை போடுங்கள்.. பணம் கொடுத்தால் போதும் எதை வேண்டுமானாலும் விளம்பரம் செய்கிறார்கள். கோகோ-கோலா, தம்ஸ்அப், 7அப் மற்றும் இதர குளிர்பான பொருட்களினால் மக்களுக்கு ஆபத்துனு தெரிந்தும் விளம்பரத்தை டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். விளம்பரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்றால், அரசு அல்லது தனியார் லேபாரட்டரியில் இருந்து Quality சான்றிதழ் வாங்கி வரச்சொல்லுங்கள். அதில், மக்களுக்கு ஆபத்து இல்லை என்று இருந்தால் மட்டும் விளம்பரம் செய்ய சொல்லுங்கள்.. இதை செய்தால், தமிழ்நாடு முழுவதும் தரமான பொருட்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்வார்கள் என்று பொருட்களை தயாரிப்பவர்களுக்கு பயம் வரும்.

தரமான பொருட்களுக்கு விளம்பரம் தேவையில்லை, எந்த பொருட்களுக்கு அதிகமான விளம்பரம் வருகிறதோ. அது, மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பொருளாகத்தான் இருக்கும். எதிர்கால நலங்கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்....நல்லதை ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment