இந்திய அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.அல் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனத்தில் 962 ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணியிடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. தாழ்த்தப்பட்டோருக்கு 195 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 118 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 260 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 389 காலியிடங்களும் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க Chartered accountant, Company Secretary, Cost & Works accountant ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது காமர்ஸ் துறையில் எம்.காம் டிகிரி படித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
இரண்டு வகையான எழுத்துத் தேர்வுகள் இருக்கும். பேப்பர்-1 எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவில் இருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். பொது ஆங்கிலப் பிரிவுக்கு 100 மதிப்பெண்களும், பொது அறிவு பிரிவுக்கு 50 மதிப்பெண்களும் உள்ளன. பேப்பர்-1 எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 3 மணி நேரம் வழங்கப்படும். பேப்பர்-2 தேர்வில் Financial Management, Accounting/ Tax, Commercial laws ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிக்கும் 100 மதிப்பெண்கள் என, மொத்தம் 300 மதிப்பெண்கள் உள்ளன. பேப்பர்-2 தேர்வுக்கு மொத்தம் 3 மணி நேரம் வழங்கப்படும். பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 ஆகிய இரண்டு தேர்வுகளையும் சேர்த்தால், மொத்தம் 450 மதிப்பெண்கள் உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. externalexam.bsnl.co.in என்கிற முகவரிக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
2. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு ரூ.1000/-.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தயவுசெய்து 01.12.2014 வரை காத்திருக்க வேண்டும். அன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2014
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 31.12.2014
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 22.02.2015
மேலும் விவரங்களுக்கு: externalexam.bsnl.co.in
No comments:
Post a Comment