தமிழ்நாடு தபால் துறையில் 797 போஸ்ட் மேன் பணியிடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. தாழ்த்தப்பட்டோருக்கு 120 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 32 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 161 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 484 காலியிடங்களும் உள்ளன. அதில், மாவட்ட வாரியாக இருக்கும் போஸ்ட் மேன் காலியிட விவரங்களை தெரிந்துகொள்ள இணையதளத்தைப் பார்க்கவும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் வழங்கப்படும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் நடைமுறை இத்தேர்வுக்கு இல்லை. பொது பிரிவினர் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், ஒ.பி.சி பிரிவினர் 36 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.dopchennai.in என்கிற முகவரிக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
2. விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பின்னர், ஆன்லைனில் சலானை பிரிண்ட் செய்து, விண்ணப்ப கட்டணத்தை ஏதேனும் ஒரு போஸ்ட் ஆபீஸ்யில் e-payment மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100/-.
தேர்வுக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. பொது பிரிவு ஆண்கள் மற்றும் ஒ.பி.சி பிரிவு ஆண்களுக்கு ரூ.400/-.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.12.2014
விண்ணப்ப கட்டணத்தை போஸ்ட் ஆபீசில் செலுத்த கடைசி தேதி: 10.12.2014
தேர்வு நாள்: பின்னர் தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: www.dopchennai.in
No comments:
Post a Comment