மருந்தே இல்லாமல் பிராய்லர் கோழி. சாதித்துவரும் ஈரோடு சகோதரர்கள்...

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டா குழந்தை பாக்கியம் இருக்காதுன்னு மறைமுகமா,  டாக்டர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆமாங்க, நண்பரின் மனைவிக்கு 5 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். முதலில் டாக்டர் சொன்ன ஒரே வார்த்தை இரண்டு மாதத்திற்கு பிராய்லர் கோழியை சாப்பிடாதீங்க என்று.. காரணம் எந்த மாத்திரையை சாப்பிட்டாலும், இந்த கோழியில் இருக்கும் மருந்துகள் வேலை செய்ய விடாமல் செய்துவிடுகிறதாம். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேர் குழந்தையின்மைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றால் பிராய்லர் கோழியும் ஒரு காரணமாம்...

நண்பர்களே முடிந்தவரை ஊசி, மருந்து கொடுக்காமல் வளர்க்கப்பட்ட கோழிகளை சாப்பிடுங்கள்... நாட்டுக்கோழிக்கும் ஊசி போட்டு வளர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி இருக்கும் போது, ஹெர்பல் சிக்கன் என்று பல கடைகளில் விற்பனையாகிறது.. உண்மையாக இருக்குமா என்கிற சந்தேகத்தில் நேரில் சென்று பார்த்தேன்.. மூலிகையும், மசாலாவையும் சேர்த்து மருந்துகளுக்கு பதிலாக தீவனமாக தருகிறார்கள். இயற்கை சூழலில் வளர்கிறது. இந்த கோழிகளின் வளர்ச்சி என்பது மூன்று மாதம் ஆகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக நம் தமிழ்நாட்டில் antibiotic free சிக்கன் என்று அறிமுகப்படுத்தி சாதித்து வருகிறது  கொங்கு ஹெர்பல் சிக்கன் நிறுவனம். இந்நிறுவனத்தை நடத்தி வரும் சகோதரர்களான உயர்திரு.அர்ச்சுனன், திரு.செந்தில்குமார் மற்றும் திரு.பூபதி அவர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்.. தற்போது சென்னையிலும் பல பகுதிகளில் Herboo என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது..

No comments:

Post a Comment