ஈரோடு மக்களுக்கு ஒரு வேண்டுகோள். ஈரோடு வளர்ச்சி அடைய, உங்களது கருத்துக்கள் அவசியம் தேவை.

மத்திய அரசால் உருவாக்கப்படவுள்ள 100 ஸ்மார்ட் நகரங்களில் முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் இருந்து சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்கள் தேர்வாகியது. அடுத்தகட்டமாக சில நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதற்கான பணிகளும் நடந்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தை இரண்டாவது கட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்றால் மக்களின் கருத்துக்களும் அவசியம் தேவை. 

ஈரோடு வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? தேவைகள் என்ன? மற்றும் உங்களது கருத்துக்களை ஸ்மார்ட் சிட்டி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 6 லட்சம் மக்கள் தொகையுடன் இருக்கும் ஈரோட்டில், ஒரு லட்சம் கருத்துக்களாவது வந்தால் மட்டுமே பலன் கிடைக்கும். 

கருத்துக்களை பதிவு செய்ய: https://mygov.in/group-issue/erode-smart-city-proposal-round-2/

ஸ்மார்ட் நகரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு: http://www.kongumalar.com/p/smart-erode.html

No comments:

Post a Comment