எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு நிறுவனத்தில் டிரைவர் பணி

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் டிரைவர் வேலை
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் டிரைவர் பணியில் சேர விரும்புவோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துடன் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களுடன் விண்ணப்ப உரையின் மீது "ஓட்டுனர் பணிக்கான விண்ணப்பம்" என்று குறிப்பிட்டு பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 27.1.2016
விவரங்களுக்கு: Click Here