15000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி மொபைல் வெறும் 1500 ரூபாய் மட்டுமே!!!!!..



ஹலோ, உங்க மொபைல் நெம்பருக்கு 15000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி மொபைல் ஆஃபர் விழுந்திருக்கு. 10 மொபைல் நம்பரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் உங்க நெம்பரும் இருக்கு...னு ஒரு லேடி உங்களுக்கு போன் பண்ணி பேசுவாங்க. எனக்கு எதுக்குங்க நீங்க ஆஃபர் தரீங்கனு கேட்டா.. "எங்க கம்பெனி 25 வருடமா பிரமாண்டமா போய்கிட்டு இருக்குங்க, அதனால ஆஃபர் தருகிறோம்"னு சொல்லுவாங்க.. சரி, கம்பெனி பெயரை சொல்லுங்கனு கேட்டால் "SKS Shopping, Bangalore" என்று ஏதோ ஒரு கம்பெனியின் பெயரை சொல்வார்கள். வெப்சைட் முகவரி கொடுங்கனு கேட்டால் "www.sksshopping.com" என்கிற போலி முகவரியையும் சொல்லுவாங்க.. உங்க வீட்டு முகவரியை கேட்பார்கள், போஸ்ட் ஆபீசில் பார்சல் வரும் 1500 ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளுங்கள் என்று உங்களிடம் நைசாகப் பேசுவார்கள். சரி, பார்சலை பிரித்துப் பார்த்து வாங்கியபின்னர் பணம் செலுத்தலாமா?. என்று நீங்கள் கேட்டால் "சார், அப்படி பார்சல் மாறிப்போச்சுனா, எனக்கு நீங்க போன் பண்ணுங்க.. நான் போஸ்ட் மேனிடன் பேசி பணம் திருப்பி கொடுக்கச் சொல்கிறேன்" என்றும் சொல்லுவார்கள்.. எவ்வளவு அழகா ஏமாத்துறாங்கனு கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். 
 
எதிர்கால நலன் கருதி வெளியிடுவோர்: www.kongumalar.com

பார்சலை பிரித்துப் பார்த்து போஸ்ட் ஆபீசில் வாங்க முடியுமா?.
போஸ்ட் ஆபீசில் கேட்ட போது, "யார் பார்சல் கொடுத்தாலும், நாங்கள் அனுப்புவோம். பார்சலில் எந்திர தகடு போடப்படுகிறது. ஆனால், பார்சல் வாங்குபவரிடன் மொபைல் போன் என்று சொல்கிறார்கள். போஸ்ட் ஆபீசில் பார்சலை பிரித்தபின்னர் பணம் செலுத்தும் முறை இல்லை. போஸ்ட் ஆபீசிற்கும், இந்த திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார்கள். 

போலீஸ் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?.
"போலீஸ் அதிகாரிகளுக்கே இதுபோன்ற அழைப்புகள் வருகிறது. ஆனால் நாங்கள் இதை பெரியதாக எடுத்துக்கொண்டு செயல்பட முடியாது. அருகில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சரிசெய்யவே எங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. 1500 ரூபாய் ஏமாற்றத்திற்காக 10000 ரூபாய் செலவு செய்து அவர்களை தேடுவோம். அப்படி தேடினாலும், போலி நம்பரில் இருந்து தான் அழைத்திருக்கிறார்கள். அந்த நம்பருக்கும், அவர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இதுபோன்று வரும் அழைப்புகளை தவிருங்கள் என்று எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளோம்" என்கிறார் போலீஸ் அதிகாரி... 

சரி, இப்படியே விட்டா ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பார்களே என்ன செய்வது என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு "15000 ரூபாய் பொருளை 1500 ரூபாய்க்கு தருகிறோம்னு சொன்னா, எப்படி தருவாங்கனு யோசிச்சா யாரும் ஏமாறவே மாட்டாங்க.. வங்கியில் இருந்து பேசுகிறேன், உங்க பின் நம்பரை கொடுங்கனும் கூட சொல்வாங்க. அப்புறம், 1 கோடி ரூபாய் உங்களுக்கு விழுந்திருக்குனு ஒரு மெயில் அனுப்புவாங்க.. இதுபோன்று செய்பவர்களிடம் இருந்து மக்கள் உஷாராகத் தான் இருக்க வேண்டும்" என்கிறார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருப்பார்கள். மக்கள் விழிப்புணர்வாக இருந்தால், ஏமாற்றுபவர்கள் தானாகவே அழிந்துவிடுவார்கள்..