ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து. தென் மாவட்டங்களுக்கு 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் பெய்த கனமழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று (02ம் தேதி) தென் மாவட்டங்களுக்கு 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment