தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை

சென்னை எழும்பூரிலிந்து புறப்படும் புதுச்சேரி, திருவனந்தபுரம் அனந்தபுரி, தூத்துக்குடி முத்துநகர், செங்கோட்டை பொதிகை, மன்னார்குடி மண்ணை, மங்களூர், திருநெல்வேலி நெல்லை, மன்னார்குடி சிலம்பு, திருச்சி மலைக்கோட்டை, சேலம், காரைக்கால், தஞ்சாவூர் உழவன், காக்கிநாடா சிர்கார் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஹைதராபாத், ஹைதராபாத் சார்மினார், தில்லி கிராண்ட் ட்ரங்க், கவுரா மெயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ரத்து செய்யப்பட்டுள்ள, பிற ரயில் நிலையங்களிலிருந்து புறப்பட்டு சென்னை வர வேண்டிய ரயில்கள் விவரம்:

திருவனந்தபுரம் அனந்தபுரி, தூத்துக்குடி முத்துநகர், செங்கோட்டை பொதிகை, மண்ணார்குடி சிலம்பு, திருநெல்வேலி நெல்லை, திருச்சி மலைக்கோட்டை, சேலம், காரைக்கால், தஞ்சாவூர் உழவன், மதுரை பாண்டியன் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், நாளை காலை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவார் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment