தமிழ்நாடே வெள்ளக்காடாக மாறியதற்கு யார் காரணம்?. மறுபடியும் இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்?.

நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. எப்போதும் 100 அடி சாலையாக இருந்த ரோடு, திடீரென்று ஒரே இரவில் 80 அடி சாலையாக மாறியுள்ளது.  20 அடியை ஒருவர் ஆக்கிரமித்து கடை வைத்திருக்கிறார். நூறு அடி சாலைதானே என்று டிரைவர் அந்த ஆக்கிரமிப்பை கவனிக்காமல் கடையை நொறிக்கிவிட்டார். ஒரு லட்சம் செலவு செய்து ஆக்கிரமித்தவருக்கு தான் நஷ்டம். டிரைவரின் மேல் எந்தவித தப்பும் இல்லை. இதேபோன்று தான் நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் நீர் நிலைகளையும் ஆக்கிரமிப்பு செய்துவிடுகிறார்கள். 5 ஏக்கர் பரப்பளவில் ஏரியாக இருந்த இடம், தற்போது 2 ஏக்கர் மட்டுமே இருக்கிறது. சில குட்டைகள் காணமலே போய்விட்டது. தண்ணீர் செல்லும் ஓடைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.

கடந்த 15 நாட்களாக பலத்த மழை, தமிழ்நாடே தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று ரமணன் சொல்கிறார். இந்த மழைக்கே இப்படியென்றால், இதைவிட அதிக மழை பெய்தால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன?.

Article by www.kongumalar.com

எந்த அரசும் நீர்நிலைகளின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவே இல்லை. அதன் காரணமாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக ஆக்கிரமித்து, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.. வடிவேல் மாதிரி கிணற்றை காணோம் என்று சொல்வதற்கு பதில், 50 சதவீதம் குளங்களையும் காணோம் என்று தான் சொல்ல வேண்டும். 

தமிழ்நாட்டில் இருக்கும் நீர்வளங்களை அதிகரிக்க வழி செய்தால், தண்ணீருக்காக பக்கத்து மாநிலத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லையே?.

தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள், கண்வாய்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பை அதிகரிக்கச் செய்திருந்தால் தற்போது வெள்ளக்காடாக மாறியிருக்காது.  தண்ணீர் அதன் வழிகளில் சென்றிருக்கும். இனிமேலாவது, இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க, அதிகாரிகளே தயவுசெய்து குளங்கள், ஏரிகள் மற்றும் கண்வாய்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வழிசெய்யுங்கள். இல்லையெனில், கடலோர பகுதிகள் கடலாக மாறினாலும் சொல்வதற்கு இல்லை.

உயிர் போன பிறகு நிவாரணம் கொடுத்து என்ன பலன்?. இனிமேலாவது, பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, நீர் நிலைகளை பாதுகாக்க வழி செய்ய வேண்டும்.




நீர் நிலைகளை பாதுகாத்திருந்தால், தமிழகத்தில் தனது தேவை போக, அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு நீர்வளம் பெருகியிருக்கும்.