திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் வீணாகும் உணவுகளை சேகரித்து, ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில் மொபைல் ஆப் அறிமுகம்

தனியார் சேவை அமைப்பு, உணவு இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கும், சாலை ஓரங்களில் கஷ்டப்படும் மக்களுக்கும் உதவும் நோக்கில், திருமணம் மற்றும் இதர விஷேங்களின் போது மீதமாகும் உணவு பொருட்களை சேகரித்து வருகின்றனர். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதை அனைத்து தரப்பு மக்களிடம் எடுத்து செல்லும் வகையில், செல்போன் செயலி ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா சேலத்தில் நடைபெற்றது. "Nofoodwaste" என்ற பெயரை கொண்ட அந்த செயலியை, பதிவு இறக்கம் செய்து அதில் வீணாகும் உணவுகள் குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக அந்த உணவு சேகரிப்பட்டு, ஏழைகளுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment