ஓ.என்.ஜி.சி எனப்படும் ஆயில் & நேட்சுரல் கேஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் 500 பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளன. ஒரு வருடத்திற்கு ரூ.48,000/- ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும். தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் என்ஜினீயரிங், எம்.பி.ஏ, எம்.பி.பி.எஸ் மற்றும் ஜுயோலஜி/ ஜுயோபிசிக்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப்படிப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்காலர்ஷிப் விவரம்:
என்ஜினீயரிங் – 247 பேருக்கு, எம்.பி.பி.எஸ் – 45 பேருக்கு, எம்.பி.ஏ – 73 பேருக்கு, ஜுயோலஜி/ ஜுயோபிசிக்ஸ் பிரிவில் முதுகலைப் படிப்பு – 135 பேருக்கு. இதில் இருக்கும் காலியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்கப்படும்.
தகுதி விவரம்?
1. இந்தியாவிற்குள் படிப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்.
2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முதலாமாண்டு ரெகுலர் வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
3. என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் டிப்ளமோ படித்திருக்கக் கூடாது. பனிரெண்டாம் வகுப்பு படித்து என்ஜினீயரிங் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்.
4. என்ஜினீயரிங் படிப்பில் நான்கு வருடம், எம்.பி.பி.எஸ் படிப்பில் நான்கு வருடம், எம்.பி.ஏ படிப்பில் இரண்டு வருடம், ஜுயோலஜி/ ஜுயோபிசிக்ஸ் பாடப்பிரிவு முதுகலைப்படிப்பில் இரண்டு வருட படிப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்.
5. என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ் படிப்பவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் படிப்புக்கு இளநிலைப் படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.50 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
7. ஸ்காலர்ஷிப் பெற தகுதியானவர்களின் பட்டியல், அடுத்த ஆண்டு ஜனவரி, மூன்றாவது வாரத்தில் ஓ.என்.ஜி.சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
8. ஸ்காலர்ஷிப் பெற தகுதியானவர்கள், கல்லூரிப் படிப்பில் குறைந்தது 50 சதவீத தேர்ச்சியாவது பெற வேண்டும். இல்லையெனில் அந்த வருடம் மட்டும் ஸ்காலர்ஷிப் கேன்சல் ஆகீவிடும்.

எவ்வளவு ஸ்காலர்ஷிப்?.
மாதம் ரூ.4000/- அல்லது வருடம் ரூ.48,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.ongcindia.com என்கிற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கல்லூரி அல்லது பல்கலைக்கழக முதல்வர்/ Dean/ HOD அவர்களின் கையொப்பம் பெற்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: I/C HR/ER, ONGC, 7th FLOOR, EAST WING, CMDA TOWER – I, No.1, GANDHI IRWIN ROAD, EGMORE, CHENNAI - 600 008.
Application Format:
No comments:
Post a Comment