கலெக்டர் கனவு நிறைவேறனுமா?.

இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும்.

தேர்வு முறை?.

பிரிலிமினரி, மெயின், பர்சனாலிட்டி & இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி தேர்வு மூன்று  கட்டமாக நடத்தப்படுகிறது.

பிரிலிமினரி தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. 
முதல்தாளில் பொதுஅறிவு , இரண்டாம்தாளில் திறன் அறிவு கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கு தலா 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது.

முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது.
இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது. அதில் தகுதித் தேர்வு பகுதி – ஏ, பகுதி – பி என இருபிரிவாக நடத்தப்படுகிறது .
.பகுதி-ஏ தேர்வு இந்திய அரசி யலமைப்பு சட்டப்பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்து எழுதலாம்.
பகுதி-பி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்விரு தேர்வுக்கும் தலா 300 மதிப்பெண்கள்.

தகுதித்தேர்வின் மதிப்பெண்கள், சிவில்சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

மெயின்தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித்தேர்வு. மற்றொன்றில் ஏழுதாள் களை எழுத வேண்டும்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழுதாள்களையும் திருத்துவார்கள். 

கல்வித்தகுதி?.

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்
பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு?.

பொதுப்பிரிவினர் 21முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத் தினர் 35 வயது வரையும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது.

பொதுப்பிரிவினர் நான்கு முறை தேர்வு எழுதலாம். O.B.C., S.C., ST பிரிவினர் ஏழுமுறை எழுதலாம்.

தேர்வுக்கு தயாராக விரும்புவோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம்.

For more job updates visit www.kongumalar.com

21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப்பவர்கள் பலரும் தேர்ச்சி அடையவில்லை என்றால் சோர் வடைந்துவிடுகின்றனர். 68% பேர் இரண்டு, மூன்றாவதுதேர்விலே தேர்ச்சி பெறுகிறார்கள். முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10%க்கும் குறைவே.

எனவே, பொறுமை, விடா முயற்சி, கடின  உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!


1 comment:

  1. அருமையான பதிவு!! என்னென்ன படிக்க வேண்டும்? எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதையும் அவ்வப்போது எடுத்துக் கூறினால் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete