தமிழகத்தில் 10 அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள். Fresher's க்கு மட்டுமே அதிக வாய்ப்பு...


என்.எல்.சி நிறுவனத்தில் 380 அப்ரண்டீஸ் காலியிடங்கள்
நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷனில் டெக்னீசியன் அப்ரண்டீஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரண்டீஸ் பயிற்சிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 23 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

கிராஜுவேட் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
காலியிடங்கள்: 200 (டெக்னீசியன் அப்ரண்டீஸ்), 180 (கிராஜுவேட் அப்ரண்டீஸ்)
எப்படி தேர்வு செய்கிறார்கள்?
டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் படிப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
www.nlcindia.com என்கிற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரிண்ட் எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் டிகிரி அல்லது டிப்ளமோ சான்றிதழ், Consolidated or Semester Mark Lists, சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழை சேர்த்து அனுப்ப வேண்டும்.
முகவரி: The Deputy General Manager, Learning & Development Centre, Neyveli Lignite Corporation Limited, Block: 20, Neyveli – 607 803.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2015
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15.10.2015
விவரங்களுக்கு:  http://www.nlcindia.com/index.php?file_name=careers 
   
தமிழ்நாடு தபால்துறையில் 142 போஸ்ட்மேன் வேலை
தமிழ்நாடு தபால்துறையில் போஸ்ட்மேன் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 91 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 19 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 15 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 17 காலியிடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 2 காலியிடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 11 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
ஆப்டிட்யூட் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவில் Geography, Indian History, Freedom struggle, culture & sports, general policy & constitution of india, economics, general science, current affairs and reasoning & ability of 10th standard ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இருக்கும். கணிதப் பிரிவில் Number systems, computation of whole numbers, decimals & fractions, relationship between numbers, fundamental arithmetic operations, percentages, ratio and proportion, profit and loss, simple interest, average, discount, partnership, time and work, time and distance, use of table and graphs, mensuration ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இருக்கும். ஆங்கிலப் பிரிவில் articles, prepositions, conjunction, tenses, verbs, synonyms & antonyms, vocabulary, sentence structure, proverbs, phrases, question from small passage ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ் பாடப்பிரிவில் பெயர் சொற்றொடர் வினைத்தொடர், கலவை மற்றும் கூட்டு வாக்கியங்கள், வாக்கிய மாற்றங்கள், புணர்ச்சி, அணிகள், சொற்றொடர், பழமொழிகள் மற்றும் வட்டார வழக்கில் உள்ள சொற்றொடர்கள், வாக்கியத்தில் உள்ள பிழைநீக்கம், துணைப்பாட உரைநடை ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு எழுதுவதற்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் எழுத்துத் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு நெகட்டிவ் மதிப்பெண் நடைமுறை இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?.
www.dopchennai.in என்கிற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். செலானை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்ப கட்டணம் ரூ.100/- மற்றும் தேர்வு கட்டணம் ரூ.400/- யை அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 4.10.2015
விவரங்களுக்கு: www.dopchennai.in 

திருச்சி பெல் நிறுவனத்தில் 200 காலியிடங்கள்
திருச்சியில் இயங்கி வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர் பணியில் சேர விரும்புவோர் Sheet Metal Worker, ஃபிட்டர் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வெல்டர் பணியில் சேர விரும்புவோர் வெல்டர் பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர்களுக்கு 106 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினர்களுக்கு 54 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோர்களுக்கு 38 காலியிடங்களும், பழங்குடியினர்களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எப்படி தேர்வு செய்கிறார்கள்?.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் உள்ளன. திருச்சியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
Careers.bhel.in என்கிற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான செலானை பிரிண்ட் அவுட் எடுத்து, பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்கள் ரூ.125/- விண்ணப்ப கட்டணத்தை "State Bank of India into Power Jothi A/C, No. 30796267034 at HE, Kailasapuram, Trichy – 14 (Code no: 01363) in favour of Bharat Heavy Electricals Limited, Tiruchy – 14" என்கிற முகவரிக்கு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும். மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரசீதுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்ப கவரின் மேல் "Application for the Post of Artisan" என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்.
முகவரி: Sr. Deputy General Manager/ HR (R&W), HRM Department, Building No.24, Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli – 620014.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2015
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 7.10.2015
விவரங்களுக்கு: Careers.bhel.in

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் சீனியர் கிரேடு சான்றிதழ் அல்லது தமிழ் தட்டச்சில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் ஜூனியர் கிரேடு சான்றிதழ் அல்லது தமிழ் தட்டச்சில் ஜூனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் கிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். காலியிடங்கள்: 10.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 30.9.2015
விவரங்களுக்கு: www.tncsc.tn.gov.in

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் பணி
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தொலைதூரக் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர விரும்புவோர் தமிழ், ஆங்கிலம், காமர்ஸ், வரலாறு, கணிதம், எக்னாமிக்ஸ், சோசியாலஜி, சைகாலஜி பாடப்பிரிவுகளில் UGC விதிமுறைகளின்படி, படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 9
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 5.10.2015
விவரங்களுக்கு: www.unom.ac.in

சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசியன் டெக்னாலஜியில் பிராஜெக்ட் சயிண்டிஸ்ட் பணி
சென்னையில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசியன் டெக்னாலஜியில் பிராஜெக்ட் சயிண்டிஸ்ட் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், சிவில், Structural, எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், ஓசியன் டெக்னாலஜி, நாவல் ஆர்கிடெக்ஷர் பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 26
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி; 9.10.2015
விவரங்களுக்கு: https://www.niot.res.in/index.php/recruitment 

தமிழ்நாடு டெக்ஸ்டைல் கழகத்தில் உதவியாளர் வேலை
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு டெக்ஸ்டைல் கழகத்தில் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் ஜூனியர் கிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Tally சாஃப்ட்வேர் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.9.2015
விண்ணப்பிப்பது எப்படி?.
Tamilnadu Textile Corporation limited, Corporation Shopping Complex, 3rd floor, Dr.Nanchappa road, Coimbatore 641 018 என்கிற முகவரியில் இருக்கும் அலுவலகத்தில் நேரடியாக சென்று ரூ.100/- செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது தபாலில் பெற விரும்புவோர் ரூ.125/- க்கு "The Tamilnadu Textile corporation Limited" payable at Coimbatore என்ற பெயரில் டி.டி யை எடுத்து மேலே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் விண்ணப்ப படிவத்திற்கு ரூ. 50/- (நேரில்), ரூ.75 (தபால் மூலம்) செலுத்தினால் போதும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Managing Director, Tamilnadu Textile Corporation limited, Corporation Shopping Complex, 3rd floor, Dr.Nanchappa road, Coimbatore 641 018

வேலூர் நீதிமன்றங்களில் வேலை

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் சுருக்கெழுத்து தட்டச்சு நிலை-3, இளநிலை உதவியாளர், தட்டச்சர், நகல் பரிசோதகர், ஓட்டுநர், நகல் எடுப்பவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் முழுநேர பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்து தட்டச்சு நிலை-3 பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கில முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கில முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நகல் பரிசோதகர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். நகல் எடுப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதத்திற்குமேல் நகல் எடுப்பவராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் மற்றும் முழுநேர பணியாளர் பணிக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர், வேலூர் மாவட்டம்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 30.9.2015
விவரங்களுக்கு: bit.ly/1Uw5mBO   

தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் லைசன்ஸிங் போர்டில் வேலை

சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் லைசன்ஸிங் போர்டில் ஜூனியர் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் படிப்புடன் கணினியை நன்கு பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Secretary, Tamilnadu Electrical Licensing Board, Thiru-vi-ka Industrial Estate, Chennai-600032
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 21.9.2015
விவரங்களுக்கு: www.tnelb.gov.in

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் 598 காலியிடங்கள்

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) மற்றும் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியில் சேர விரும்புவோர் கணிதவியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படிப்புடன் கேட் 2014 அல்லது 2015 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..

தேர்வு முறை?.
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
விண்ணப்பதாரர்கள் www.aai.aero என்கிற இணையதளத்திற்குச் சென்று ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். ஸ்டெப்-1 படிவம் சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு ஸ்டெப்-2 படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.10.2015
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2015

No comments:

Post a Comment