கல்லூரியில் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்காக, கல்விக்கடன்?. இனி கவலை வேண்டாம்.....

இந்தியாவில் பல மாணவர்கள் கல்லூரியில் படிக்க வசதியில்லாமல் வேலைக்கு சென்று வருகிறார்கள். சிலர், கந்துவட்டிக்கு பணம் வாங்கி கல்லூரியில் படிக்கிறார்கள். கந்துவட்டிக்கு பணம் வாங்குபவர்களின் நிலைமை உங்களுக்கு தெரிந்திருக்கும். கல்விக்குனு கடன் யார் கேட்டாலும் தர மாட்டாங்க. ஏதேனும் ஒரு வங்கியில், கல்விக்கடனை கேட்டுப்பாருங்கள். தருவார்களா?. வீடு கட்ட கடன் கேட்டாலே, வங்கியில் நம்மை மதிக்க மாட்டார்கள். கல்விக்கடனுக்கு சொல்லவா வேண்டும். ஆனால், கல்லூரியில் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. கட்டாய கல்விக்கடன் என்கிற திட்டத்தை, ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில், அனைவருக்கும் கல்விக்கடன் சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

vidyalakshmi.co.in என்கிற இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.  கல்விக் கடனை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தை நிர்வகிக்கும் பணியை NSDL e-Governance Infrastructure Limited  மேற்கொண்டு வருகிறது. நிதி அமைச்சகம், உயர் கல்வித்துறை, மத்திய மனித வளத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த இணையதளம் செயல்படும். இந்த சேவை,  பிரதம மந்திரியின் வித்யலட்சுமி கார்யகிரம் (பிஎம்விஎல்கே) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் நோக்கம் என்ன?.

போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் தனது மேற்படிப்பை தொடர முடிய வில்லை என்ற நிலை எந்த ஒரு மாணவனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் வங்கிகள் கல்விக் கடனுக்கு ஒதுக்கியுள்ள திட்டங்கள் குறித்த தகவல்கள், விண்ணப்பங்கள் மற்றும் அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பற்றிய தகவல்கள் அனைத்தும் இடம்பெறும். இந்த இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் எந்த கட்ட பரிசீலனையில் உள்ளது என்ற விவரமும் கிடைக்கும். விரைவில்  அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் இதனுள் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின் தனியார் வங்கிகளையும், vidyalakshmi.co.in தளத்தில் இணைக்கப்பட உள்ளது.
Article by www.kongumalar.com

கல்விக்கடன்  குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியாமல் தவிக்கும் கிராம மற்றும் நகரப்புற மாணவ மாணவியர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment