கண்ணீருடன் எழுதுகிறேன்

ஒரு நல்ல மனிதர் என்று அனைவராலும் சொல்லப்படுபவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம். தமிழகத்திற்கே பெருமை சேர்த்தவர். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை கேட்டவுடன், கண்களில் இருந்து தானாக கண்ணீர் வருகிறது. கண்ணீருடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன். அவர் இளைஞர்களை கனவு காணுங்கள் என்றார். உயிருடன் இருக்கும் போது அவர் சொன்ன கருத்துக்களை கண்டுகொள்ளாமல் இருந்தோம். இனிமேல் ஆவது இளைஞர்கள் அனைவரும் அப்துல்கலாம் சொன்னது போல் இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவோம். உயிருடன் இருக்கும்போது அரசியல்வாதிகள் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். இறந்துவிட்டார் என்றவுடன், இளைஞர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்து ஓட்டு வாங்கத்தான் நினைப்பார்கள். அப்துல்கலாம் போன்ற மாமனிதர் மறுபடியும் வெளியே வரவேண்டும். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால், அப்துல்கலாம் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன்.. இது சத்தியம்..

அப்துல்கலாம் இறந்துவிட்டார், நாளைக்கு விடுமுறைனு சந்தோஷப்படுபவர்களை பார்த்தால் பலார்னு கண்ணத்தில் அடிக்கனும் போல தோனுது. ஆனால், அப்துல்கலாம் போன்று அமைதியான மனிதராய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...

ஒரு அப்துல்கலாம் போனால் என்ன, அவரைப் போன்று 100 அப்துல்கலாம் வருவார்கள்... ஜெய்ஹிந்த்....

இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment