ஈரோட்டில் எங்கு பார்த்தாலும், நடிகர் சூர்யா புகைப்படத்துடன் ஒளிரும் ஈரோடுனு போஸ்டர் இருக்கு, ஒளிரும் ஈரோடு ங்கிற படத்துல சூர்யா நடிக்கிறாரா. ஈரோட்டுல சூட்டிங்க் எடுக்கிறாங்களா?. எங்க எடுக்குறாங்க, யார் நடிகைனு கேட்கிற மக்களும் இங்கு இருக்கிறார்கள். போஸ்டரை பார்த்து, மக்கள் புரிந்துகொண்டது இதைத்தான். ஒளிரும் ஈரோடுனா என்னங்க?. என்ன செய்வாங்கனு யாருக்காவது தெரியுமா?.னு சில இளைஞர்களிடம் கேட்டால், அதுநமக்கு எதுக்கு, நம்ம சூர்யா வராறு போய் பார்க்கப்போகிறோம், என்கின்றனர்.
ஒளிரும் ஈரோடுனா என்ன?. என்ன செய்வாங்க?.
ஏ.சி காரில் செல்லும் பொழுது யார் எப்படி போனால் என்ன. நம்ம வெயில் படாம போனால் சரினு இருக்கிறவங்க நிறைய பேர். ஆனால் சில மனிதர்கள் ஏ.சி காரில் சென்றாலும், அடுத்தவரின் நலனையும் பார்க்கிறார்கள். பேருந்து நிலையத்தில் மக்கள் வெயில் நிற்கிறார்கள் என்று நிழற்குடை அமைத்துத் தந்துள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல், ஈரோட்டில் பல இடங்களில் பேருந்து நிழற்குடை, டிராஃபிக் சிக்னல், மரங்கள் என நிறைய சேவைகளை செய்தும் வருகிறார்கள். எடுத்துக்காட்டாக. சக்திமசாலா, எஸ்.கே.எம், அக்னி ஸ்டீல், எம்.சி.ஆர். மில்கா, மில்கிமிஸ்ட் மற்றும் ஈரோட்டில் தயாரிக்கப்படும் சில நிறுவனங்களின் பெயரில் விளம்பரத்துடன் சேவையும் இருக்கும். கவனிக்காமல் இருந்தவர்கள், கவனித்துப்பாருங்கள். இதுவரை தனித்தனியாக செய்துவந்த ஈரோடு நிறுவனங்கள், தற்போது எல்லா நிறுவனங்களும், மக்களுடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது தான் ஒளிரும் ஈரோடு. இதை, தொடங்குவதற்காகத் தான், சூர்யா வருகிறார்.
ஒளிருமா ஈரோடு?.
பத்து கைகள் இணைந்தால், வெளிச்சம் குறைவாகத் தான் இருக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைகள் இணைந்தால் மட்டுமே வெளிச்சம் அதிகமாக இருக்கும். வெளிச்சம் அதிகமானால், தானாகவே ஒளிரும் ஈரோடு.
மரம் வளர்ப்போம், குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொட்டுவோம். பசுமையான ஈரோடாக மாற்றுவோம். ஒளிரும் ஈரோடு அறக்கட்டளையில் இணைந்து செயல்பட துவங்குவோம். இன்று 04.06.2015, திண்டல் வேளாளர் கல்லூரியில் மாலை 05.30 மணிக்கு துவக்க விழா, அனைவரும் வருக. எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்
No comments:
Post a Comment