லஞ்சம் வாங்குபவர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் பாரட்டுக்களா?.

நம் நாட்டில் லஞ்சம் வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், லஞ்சம் வாங்குபவர்களை மட்டும் எண்ணவே முடியாது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல். ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள்?. என்ன காரணம் என்று லஞ்சம் வாங்குபவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்தோம்.
"மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர், குமார். கல்விக் கடனைப்பெற்று. என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ முடித்தார். வேலை கிடைக்கவில்லை. அரசு வேலையில் சேருவதற்காக, அரசுத் தேர்வுகளை எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெற்றும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை என்று சொல்லியிருக்கிறார்கள். தந்தையிடம் சொல்ல, அரசு வேலை கிடைத்தால் போதும் என்று தங்கியிருந்த வீட்டை விற்று, 15 லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார். 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். தங்குவதற்கு வீடு இல்லாமல், புறம்போக்கு இடத்தில் குடிசையை போட்டு குடியிருந்திருக்கிறார்கள்". "15 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்து வேலைக்குச் சேர்ந்தேன். வீட்டை விற்று லஞ்சம் கொடுத்த பணத்தை, எப்படி சம்பாதிப்பது. நானும் லஞ்சம் வாங்கித்தான் ஆக வேண்டும்." என்கிறார் குமார்.


பல லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, அரசு வேலையில் சேருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேருகிறீர்கள். நீங்கள் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினால், வேலை பறிபோய்விடும். அப்படியென்றால், 15 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்தது வேஸ்ட். எதற்காக லஞ்சம் கொடுத்து அரசு வேலையில் சேர வேண்டும். உங்களுக்கு திறமை இல்லையா?. இந்தியாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் லஞ்சம் கொடுக்கும்போது, தெரியாமல் ஒரு வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் போடுங்கள். லஞ்சத்தை ஒழிக்க இதுவே வழி.

எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு ஏற்பாடு செய்வதை விட்டுவிட்டு,. லஞ்சத்தில் குறிக்கோளாக இருக்கும் எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களே உஷாரா இருங்க, லஞ்சம் வாங்கினா வாட்ஸ்அப் தான்.


No comments:

Post a Comment