ஹெல்மட் விற்பனை மூலம் அரசுக்கு லாபமா?. மக்களின் குமுறல்.


தமிழகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமம் ரத்து என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை செய்திகளில் படித்திருப்போம். இந்த உத்தரவு மூலம் அரசுக்கும், போலீசுக்கும் நல்ல வருமானம் என்று சில மக்கள் சொல்லிவருகிறார்கள். மக்களிடம் வருமானம் சம்பாதிக்க நிறைய வழி உள்ளது. ஏன் டாஸ்மாக் இல்லையா?. அப்படி இருக்கும்போது, ஹெல்மட் மூலம் அவர்களுக்கு லாபம் என்று சொல்வது மிகவும் தவறு. ஹெல்மட் அணியாவிட்டால், அரசுக்கு தான் நஷ்டம், எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்று நினைத்துவிட வேண்டும். ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால், நமக்கு மட்டும்தான் மிகப்பெரிய நஷ்டம். கிழே இருக்கும், ஒரு உண்மை சம்பவத்தை படித்துப்பாருங்கள்.

"குமார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், காதல் திருமணம் செய்துகொண்டான். காதல் திருமணம் செய்த காரணத்தால், இரண்டு வீட்டிலும் பிரச்சனை, தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்கள். இரண்டு வருடத்திற்கு பின், குமாரின் மனைவி தன் ஒரு வயது குழந்தையுடன் பவானியில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்துவந்தால். திடீரென்று என் கண்ணில் பட்ட அவரிடம், கதையை கேட்டேன். "திருமணம் ஆகி ஒரு வருடத்தில், குமார் வேலைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அந்த விபத்தில் குமாருக்கு, தலையில் அடிபட்டு மூளை வெளியே வந்துவிட்டது. கை, கால் போன்ற இடங்களில் சிறிய காயங்கள் தான்". என்று கண்ணீருடன் சொன்ன அவரது மனைவி. சார், நீங்களும் உங்க குடும்பத்தை இந்த மாதிரி விட்டுவிடாதீங்க. என் கணவர் ஹெல்மட் போட்டிருந்தால், உயிருடன் இருந்திருப்பார்னு எல்லா சொன்னாங்க. நீங்களாவது ஹெல்மட் போடுங்கனு சொன்னதில் இருந்து எங்கு சென்றாலும் ஹெல்மட் இல்லாமல் நான் போவதில்லை."

ஹெல்மட் போடுவதனால் என்ன பலன்?

விபத்து ஏற்படும்போது முதலில் தலையில் மட்டுமே அடிபடும். தலையில் பயங்கரமாக அடிபட்டால் உடனே உயிரும் போய்விடும். ஆனால் கை, கால் என மற்ற உறுப்புகளில் அடிபட்டால், சரிசெய்து கொள்ளலாம். தலையை காப்பாற்றுவதற்காகத் தான் ஹெல்மட் போடுகிறோம். அதுமட்டுமில்லை, வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் போடுவதனால் கண்ணில் தூசி படாது, வெயில் மற்றும் மழையிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். ஹெல்மட் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதனால் தான், மக்கள் ஹெல்மட் போடுவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஹெல்மட்டை தலையில் அணிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஓட்டுனர் உரிமம் ரத்து என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைசன்ஸ் கூட புதுசு வாங்கிக்கலாம், உயிர் போனா வராதுங்க..

அரசு இதைமட்டும் செய்யுமா?.

டி.வி, ஃபேன், மிக்சினு இலவசமா கொடுத்ததற்கு பதில் உயிர் காக்கும் ஹெல்மட்டை இலவசமா கொடுத்திருக்கலாம். சரி, பரவாயில்லை. இதையாவது அரசு செய்ய வேண்டும். ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றவுடம் ஹெல்மட் விலை 500 லிருந்து 1000 ரூபாய் ஆகிவிடும்.  விலையை ஏற்றிவிடுவார்கள். குறைந்த சம்பளத்தில் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. மக்கள், விலை குறைவாக கொடுப்பவர்களிடம் செல்வார்கள், அதில் தரமற்ற ஹெல்மட்டையும் விற்பார்கள். தரமற்ற ஹெல்மட் மூலம் உயிரை காப்பாற்றவே முடியாது. ஹெல்மட் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். தரமான ஹெல்மட் மட்டுமே விற்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

அரசுக்கு ஒரு வேண்டுகோள்?.

தரமான ஹெல்மட்டை மானிய விலையில் ரேஷன் கடைகளிலோ, சிந்தாமணி அங்காடியிலோ விற்கலாமே...இப்படி செய்தால், நிச்சயம் எல்லோரும் ஹெல்மட் போடுவார்கள்..

 


No comments:

Post a Comment