92 வது பிறந்தநாள் விழா முடிந்து ஒரு வாரம் ஆகிறது, இன்னமும் அகற்றப்படவில்லை. இதுதான் தலைவருக்குச் செய்யும் நன்றிக்கடனா?..


தலைவருக்கு 92 வது பிறந்தநாள் வாழ்த்துனு, நிறைய பக்கம் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனரில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். தலைவர், சென்னையில் இருக்கிறார். நேரில் சென்று வாழ்த்தியிருக்கலாம். பிறந்தநாளன்று ஈரோட்டிற்கோ, திருச்சிக்கோ அவர் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருந்தும், அவருக்கு வாழ்த்துனு பேனர் வைத்திருக்கிறோம். பரவாயில்லை, விழா முடிந்து ஒரு வாரம் ஆகிறது. பேனர் வைத்திருந்த இடத்திற்குச் சென்று பாருங்கள். பேனர் கிழிந்து கீழே கிடுக்கும் அல்லது சாய்ந்து கிடக்கும். இன்னும் சில நாட்களில், குப்பையிலோ, மண்ணிலோ கலந்துவிடும். வாழ்த்துங்குற பேரில் தலைவரின் புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் பிளக்ஸ் குப்பையிலோ, மண்ணிலோ கிடக்கும். இதுதான் தலைவருக்கு வாழ்த்தா?. தயவுசெய்து, பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களை அகற்றி, சுழற்சி முறைக்கு ஏற்பாடு செய்யவும். பிளாஸ்டிக் பொருளினால் ஏற்படும் அபாயத்தில் இருந்து, நம் மக்களை காப்போம். இதைப் படித்த தொண்டர் பேனர்களை அகற்றுவார் என்று நம்புகிறோம். எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

No comments:

Post a Comment