ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் 700 காலியிடங்கள்


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் துபாயில் வேகமாக வளர்ந்து வரும் கல்யாண் சில்க்ஸ் தனது 22வது ஷோரூமை சேலத்தில் தொடங்குகிறது.  ஏற்கனவே இருக்கும் ஈரோடு ஷோரூம் மற்றும் சேலத்தில் தொடங்க இருக்கும் பிரம்மாண்ட ஷோரூமில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.

சேலம்:

ஷோரூம் மேனேஜர் (5 Nos)

டெக்ஸ்டைல் துறையில் 6 முதல் 7 வருட அனுபவம் பெற்றவராக, அனைத்து விதங்களிலும் ஷோரூமை நிர்வகிக்கும் திறமை படைத்தவராக இருக்க வேண்டும். பட்டப் படிப்பிற்கு நிகரான கல்வித் தகுதியுடன் 40   வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஃப்ளோர் மேனேஜர் (5 Nos)

டெக்ஸ்டைல் துறையில் 6 முதல் 7 வருட அனுபவம் பெற்றவராக, ப்ளோர் மேனேஜராக குறைந்த பட்சம் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பிற்கு நிகரான கல்வித் தகுதியுடன் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பர்ச்சேஸ் மேனேஜர் (5 Nos)

அனைத்து விதமான புடவைகள், சுடிதார்கள், கிட்ஸ் கலெக் ஷன்கள், ஆண்களுக்கான ஆடைகள் இவற்றை பர்ச்சேஸ் செய்வதில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். 3-5 வருட அனுபவத்துடன் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சேல்ஸ் மேன்(200 Nos)

நல்ல பொலிவான தோற்றமுள்ள, வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் பேசும் திறமை படைத்த ஆண்கள் தேவை. குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 30க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
சேலம் ஹோட்டல் AMR எவர் கிரீன், ஓமலூர் மெயின் ரோடு, சேலம்.

தேதி: 21 & 22 ஜீன் 2015, (ஞாயிறு, திங்கள்)

காலை 9:30 மணி முதல் 5:00 மணி வரை.

ஈரோடு:

சேல்ஸ் கேர்ள் (200 Nos)

ஏதாவது ஒரு டெக்ஸ்டைல்ஸ் ஷோரூமில் 1 வருட பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 2-3 வருட அனுபவம் உள்ளவர்கள் சீனியர் சேல்ஸ் கேர்ளாக பணியமர்த்தப்படுவார்கள். வயது 30க்குள் இருக்க வேண்டும்.

சேல்ஸ் ட்ரெய்னீ (200 Nos)

டெக்ஸ்டைல் துறையில் சேல்ஸ் பிரிவில் பணியாற்ற ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. வயது 25க்குள் இருக்க வேண்டும்.

பில்லிங் கிளார்க் (20 Nos)
கேஷியர் (20 Nos)
பேக்கிங் & டெலிவரி பணியாளர் (30 Nos)
டெய்லர் (5 Nos)
குடோன் பணியாளர் (5 Nos)
டிரைவர்கள் (5 Nos)
எலக்ட்ரீஷியன் (3 Nos)

நேர்முகத் தேர்வு:
இடம்: ஈரோடு கல்யாண் சில்க்ஸ், மேட்டூர் ரோடு, ஈரோடு.

தேதி: 21 & 22 ஜீன் 2015, (ஞாயிறு, திங்கள்)

காலை 9:30 மணி முதல் 5:00 மணி வரை.

டிரைவர், குடோன் பணியாளர், எலக்ட்ரீஷியன் ஆகியவர்கள் நேர்முகத் தேர்விற்கு மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மட்டுமே வரவும்..

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.

தங்குமிடம் இலவசம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கல்யாண் சில்க்ஸின் ஈரோடு அல்லது பாலக்காடு, திருச்சூர் (கேரளா) ஷோரூம்களில் 1 மாத பயிற்சி பெற்ற பின்னரே சேலம் அல்லது ஈரோடு ஷோரூமில் பணியமர்த்தப்படுவார்கள். ஹாஸ்டலில் தங்க தயாராக உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சம்பளம் மற்றும் இதர சலுகைகளை சேர்த்து இன்சென்டிவ் வழங்கப்படும். மாதத்திற்கு 6 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். வேலைக்கு சிபாரிசுகள் ஏற்கப்படாது.
விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பயோ-டேட்டா மற்றும் புகைப்படத்துடன் சேலத்தில்-ஹோட்டல் A.M.R எவர் கிரீன், ஓமலூர் மெயின் ரோடு, சேலம் என்ற முகவரிக்கும், ஈரோட்டில்-கல்யாண் சில்க்ஸ், மாநகர பஸ் நிலையம் அருகில், மேட்டூர் ரோடு, ஈரோடு என்ற முகவரிக்கும் நேரடியாக வரவும். நேரடியாக வர இயலாதவர்கள் HR மேனேஜர், கல்யாண் சில்க்ஸ், மேட்டூர் ரோடு, ஈரோடு என்ற முகவரிக்கு தங்களுடைய பயோ-டேட்டா மற்றும் புகைப்படத்தை அஞ்சலில் அனுப்பலாம். அஞ்சலின் மேலே விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு careers@kalyansilks.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

No comments:

Post a Comment